Breaking News

தமிழக அரசில் அலுவலக உதவியாளர் வேலை வாய்ப்பு சென்னையில் பணியிடம் முழு விவரம்

அட்மின் மீடியா
0
சென்னை குற்ற வழக்கு தொடர்வுத்துறை இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள ஒரு அலுவலக உதவியாளர் பணியிடத்தை நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து 05.01.2024 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 

பணி:-

அலுவலக உதவியாளர்

பணியின் தன்மை:-

அரசு விதிகளின்படி சென்னை குற்ற வழக்கு அலுவலகத்தில் தொடர்வு இயக்குநர் பணிபுரியும் உயர் அலுவலர்களுக்கு அடிப்படை பணிகளை மேற்கொள்வதில் உதவி செய்தல், அலுவலக நடைமுறைப் பணிகளில் உதவிடுதல்

மாத சம்பளம்:-

ரூ.15700 ரூபாய் முதல் 58100/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

வயது வரம்பு:-

குறைந்த பட்ச வயது 01.07.2023 அன்று 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்

அதிகபட்ச வயது வரம்பு (01.07.2023 அன்றுள்ளவாறு)

பொதுப்பிரிவு (GT)32 வயது

பிற்படுத்தப்பட்ட வகுப்பு, பிற்படுத்தப்பட்ட வகுப்பு (முஸ்லீம்), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மற்றும் சீர்மரபினர் (BC, BCM, MBC & DC)34 வயது

ஆதிதிராவிடர் (SC), பழங்குடியினர் (ST) மற்றும் ஆதரவற்ற விதவை பிரிவில் அனைத்து வகுப்பினர் (DW-All categories)37 வயது

கல்வித்தகுதி:-

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும் 

மற்றும் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்

தபால் முகவரி:-

இயக்குநர். 

குற்ற வழக்கு தொடர்வுத்துறை, 

நெ.5, காமராஜர் சாலை, - 

600 005

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

 05.01.2024

பணிநியமனம் முற்றிலும் தற்காலிகமானது.

மேற்கண்ட நியமனத்திற்கான நேர்காணலை ஒத்தி வைக்கவோ, நியமன அறிக்கையை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி இரத்து செய்யவோ, குற்ற வழக்கு தொடர்வுத்துறை இயக்குநர் அவர்களுக்கு முழு அதிகாரம் உள்ளது. 

மேலும் தேவைப்படின் தேர்வர்களுக்கு எழுத்துத் தேர்வும் நடத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இத்துடன் தெரிவிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகளை தவறாது பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு:-

இங்கு கிளிக் செய்யவும்

https://cms.tn.gov.in/sites/default/files/announcement/OA_Notification_050124.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback