Breaking News

தென் மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்க வேண்டுமா தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் இதோ

அட்மின் மீடியா
0
தென் மாவட்டங்களில் நிவாரண பொருட்கள் வழங்க வேண்டுமா தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் இதோ

 


தென் மாவட்டங்களில் அதி கன மழை - பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கான நிவாரண பொருட்கள் வழங்குவதற்கான தொடர்பு எண்கள் அறிவிப்பு 

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த இரண்டு நாட்களாக அதிகனமழை பெய்து வருவதை தொடர்ந்து அங்கு பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை (ரொட்டி பாக்கெட்டுகள், தண்ணீர் பாட்டில்கள், பிஸ்கெட் பாக்கெட்டுகள், பால் பவுடர், உலர் பழங்கள், மளிகை பொருட்கள், பாய்கள், போர்வைகள், துண்டுகள், மெழுகுவர்த்திகள், தீப்பெட்டிகள், லுங்கிகள், நைட்டிகள், நேப்கின் பேடுகள் உள்ளிட்டவை) வழங்க விரும்பும் தன்னார்வலர்கள் மற்றும் நிறுவனங்கள் கீழ்க்கண்ட வாட்ஸ்அப் அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்


வாட்ஸ்அப் அலைபேசி எண்: 7397766651

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback