Breaking News

பெண்களை பற்றி தவறாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட யூடிப்பர் மீது சைபர் கிரைம் காவல்துறை வழக்குப்பதிவு

அட்மின் மீடியா
0

பெண்களை பற்றி தவறாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட யூடிப்பர் மீது சைபர் கிரைம் காவல்துறை வழக்குப்பதிவு

திருச்சிராப்பள்ளி மாவட்டம். சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் விஜய், வயது.26, என்பவர், இணைய மற்றும் சமூக வலைதள குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்த போது, இன்று 04:12.23-ஆம் தேதி சமுகவலைதளமான YouTube மற்றும் Instagram -வை பார்த்துக் கொண்டு இருந்த போது inba's track என்ற பெயரில் @inba's track என்ற id -யை பயன்படுத்தி சமூக வலைதளங்களில் ஆபாசத்தை தூண்டும் வகையில் பேசுவது போல சமூக வலைதளங்களில் ஆங்கிலத்தில் TEXT வருவது போல mono-acting மூலம் வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளார். மேலும் இவரின் mono-acting வீடியோக்களை பார்க்கும்போது, வீடியோக்கள் அனைத்தும் அருவறுக்கத்தக்க வகையிலும், ஆபாசமான வகையிலும் உள்ளது. 

இவ்வீடியோக்களை பார்க்கும் மாணவ, மாணவியர்கள் மற்றும் கல்லூரியில் படிக்கும் இளைஞர்களிடம் மீண்டும் வீடியோக்களை பார்க்க தூண்டி, பாலுணர்வுகளை தூண்டும் வகையிலும், கணவன், மனைவி உறவு முறை பற்றி ஆபாசமாகவும், மேலும் முதலிரவு பற்றிய வீடியோக்களை அனுப்பியும். பெண்களை பற்றி தவறாக சித்தரித்தும் mono-acting மூலம் பல வீடியோக்களை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்து Instagram -ல் 82,000-க்கும் மேற்பட்ட Followers மற்றும் YouTube-ல் 1,93.000 subscribers பெற்று உள்ளதால், இவரது வீடியோக்களைப் பார்க்கக் கூடிய குழந்தைகள், பெண்கள்; மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் இடையே பாலியல் தொடர்பான எண்ணங்கள் ஏற்பட்டு பாலியல் குற்றச் செயலில் ஈடுபட வாய்ப்புள்ளது என்பதாலும், 

இதனால் இளைஞர் சமூதாயத்திற்கு சீர்கேடு ஏற்படும் வகையிலும், மேலும் பெண்களின் நாகரீகத்தை இழிவுப்படுத்தும் வகையில் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக திருச்சிராப்பள்ளி மாவட்டம், சைபர் கிரைம் காவல் நிலையத்தில்  32/23, U/s 292(a), 294(b), 509 IPC & 67, 67-A, 67-B of IT Act. & 4 r/w 6 of Indecent Representation of Women (Prohibition Act.) நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback