ஒரு சார்ஜ்ஜில் 800 கிலோமீட்டர் மைலேஜ் XIAOMI அறிமுகபடுத்திய எலெக்ட்ரிக் கார் வீடியோ XIAOMI electric car
சியோமி இன்று புதிய எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்துள்ளது.சியோமி SU7 என்ற பெயரில் புதிய காரை அறிமுகம் செய்துள்ளது.
மேலும் XIAOMI SU7 வெர்ஷன் மாடல் கார் ஒரு சார்ஜ்ஜில் 668 கிலோமீட்டர் வரையில் மைலேஜ் திறன் கொண்டது.
அதேபோல் மற்றொரு மாடலான XIAOMI SU7 MAX கார் ஒரு சார்ஜ்ஜில் 800 கிலோமீட்டர் வரை மைலேஜ் திறன் கொண்டது.
மேலும் இந்தக் காரிலிருக்கும் ஹைப்பர் சார்ஜ் தொழில்நுட்பத்தின் மூலம், 5 நிமிடம் சார்ஜ் செய்தால் 220கிமீ வரை பயணிக்க முடியும் எனவும் அதே போல் 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தால், 510 கிமீ தூரம் பயணிக்க முடியும் என ஜியோமி அறிவித்துள்ளது
மேலும் இந்த எஸ்யூ7 எலெக்ட்ரிக் காரில் முன் வீல் - பின் வீல் இயக்கம் மற்றும் பன்முக பேட்டரி பேக் ஆகிய ஆப்ஷன்களில் உள்ளது
மேலும் சூப்பரான ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை இந்த காரில் சியோமி வழங்கி இருக்கின்றது
அதைவிட முக்கியமாக ஹைபர் ஓஎஸ் இன்டெக்ரேஷன் வசதி கொடுக்கப்பட்டுள்ளது அதாவது உங்கள் காரை வீட்டில் உள்ள ஸ்மார்ட் கருவிகளை காரில் இருந்தபடியே கன்ட்ரோல் செய்ய முடியும்.
சியோமி நிறுவனத்தின் இந்த எலெக்ட்ரிக் கார் தற்போது சீனாவில் அறிமுகமாகி உள்ளது மிக விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://twitter.com/ShabuWheels/status/1739472060571951303
Tags: தொழில்நுட்பம்



