Breaking News

நெல்லை, தூத்துக்குடியில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ₹6000 வழங்கப்படும் தமிழக முதல்வர் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

தென் மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத மழை காரணமாக நெல்லை, தூத்துக்குடியில் வெள்ளபாதிப்பு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளானது இந்நிலையில் இன்று மழை வெள்ள பாதிப்புக்குள்ளான மாவட்டங்களில் சுற்றுப்பயனம் மேற்கொண்ட தமிழக முதல்வர் நெல்லை, தூத்துக்குடியில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ₹6000 நிவாரண உதவி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

அதேபோல் விவசாய நிலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹெக்டேருக்கு ₹17,000 வழங்கப்படும் எனவும் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு இழப்பீடாக ₹10,000 ம் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்

தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17, 18ம் தேதிகளில் கனமழை பெய்யும் என்று 17ம் தேதிதான் வானிலை ஆய்வு மையம் அறிவித்தார் மேலும்    நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு ரூ.6,000 நிவாரணம் வழங்கப்படும். 

எனவும் அதேபோல் கன்னியாகுமரி, தென்காசி மாவட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணமாக ரூ.1,000 வழங்கப்படும் என அறிவித்துள்ளார்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback