நாளை 5 ம் தேதி பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அறிவிப்பு எந்த எந்த மாவட்டங்கள் தெரியுமா

அட்மின் மீடியா
0

மிக்ஜாம் புயல் காரணமாக 5 ம் தேதி பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அறிவிப்பு எந்த எந்த மாவட்டங்கள் தெரியுமா

03-12-2023 தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய 'மிக்ஜாம்' புயல்' வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (04-12-2023) காலை 0830 மணி அளவில் மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திரா- வடதமிழக கடலோரப்பகுதிகளில் வலுப்பெற்று 'தீவிர புயலாக' சென்னைக்கு கிழக்கு-வடகிழக்கே சுமார் 90 கிலோமீட்டர் தொலைவிலும், நெல்லூருக்கு (ஆந்திரா) தென்கிழக்கே சுமார் 170 கிலோமீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு வடகிழக்கே சுமார் 200 கிலோமீட்டர் தொலைவிலும், பாபட்லாவிற்கு (ஆந்திரா) தெற்கு-தென்கிழக்கே சுமார் 300 கிலோமீட்டர் தொலைவிலும், மசூலிபட்டினத்திற்கு (ஆந்திரா) தெற்கே சுமார் 320 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. 

இது தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நகர்ந்து 05-12-2023 முற்பகல் தெற்கு ஆந்திரா கடற்கரையை நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே பாபட்லாவிற்கு அருகே தீவிர புயலாக கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 110 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 

04.12.2023: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யவாய்ப்புள்ளது. வேலூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 

05.12.2023: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது

இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 

சென்னை மாவட்டத்திற்க்கு  பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது!

திருவள்ளூர் மாவட்டத்திற்க்கு  பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது!

காஞ்சிபுரம் மாவட்டத்திற்க்கு  பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது!

செங்கல்பட்டு மாவட்டத்திற்க்கு  பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு டிசம்பர் 5 ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது!

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback