Breaking News

வெள்ளத்தில் சிக்கியுள்ள ரயிலில் உள்ள 500 பயணிகள் இன்று மீட்கப்படுவார்கள் முழு விவரம்

அட்மின் மீடியா
0

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த சனிக்கிழமை (டிச.16) இரவு முதல் வரலாறு காணாத கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

இதனால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நகர பகுதியில் உள்ள சாலைகள், தெருக்கள் முதல் கிராமங்கள் வரை அனைத்து பகுதிகளும் வெள்ளத்தில் மிதக்கின்றன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. 


பெரும்பாலான சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. விடாது பெய்த கனமழையால் மாவட்டத்தில் உள்ள அணைகள் அனைத்தும் நிரம்பியுள்ளன. இதனால், அணைகளில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டு, தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தாமிரபரணி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளத்தால் சிக்கியுள்ளவர்களை ஹெலிகாப்டர்கள் மற்றும் படகுகள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றார்கள்

இதனால் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும், வெள்ள சூழ்ந்த பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மதுரையில் இருந்து ஹெலிகாப்டர்கள் மூலம் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றது

லாரிகள் மூலம் எடுத்துச் செல்லப்படும் உணவுப் பொருட்கள் மதுரை விமான நிலையம் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படுகின்றது

இந்நிலையில் கடந்த 17 ம் தேதி இரவு 8.25 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து 800 பயணிகளுடன் சென்னை புறப்பட்ட செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் கனமழை காரணமாக ஸ்ரீவைகுண்டம் அருகே நடுவழியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ரெயில் நிலையம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்திருந்ததால் பயணிகள் ரெயிலை விட்டு வெளியேற முடியாமல் தவித்தனர்.

மழைநீர் அதிகரிப்பால் 30 மணி நேரத்திற்கும் மேலாக ரயிலில் உள்ள பயணிகள் மீட்க முடியாத நிலை ஏற்பட்டது. தொடர்மழை மற்றும் சாலை போக்குவரத்து துண்டிப்பு காரணமாக பயணிகளை வெளியேற்றுவதில் சிக்கல்கள் நீடித்தன.தொடர்ந்து மழை பெய்வதால் ரயில் தண்டவாளத்துக்கு கீழே மண் அரிப்பு ஏற்பட்டு அந்தரத்தில் ரயில் தண்டவாளம் தொங்கி வருகிறது.

ரயில் நிற்கும் பகுதிக்கு செல்லும் அனைத்து வழிகளும் துண்டிக்கப்பட்டுள்ளதால் மீட்பதில் நீடிக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தால் தன்னார்வலர்கள் நெருங்க முடியாத நிலையில் எந்த உதவியும் இன்றி 34 மணி நேரமாக பயணிகள் தவித்து வந்தனர்.

இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் முயற்சியால் நேற்று அதிகாலை வரை நடந்த மீட்பு பணியில், சுமார் 300 பயணிகள் மீட்கப்பட்டனர். அவர்கள் அருகில் உள்ள பள்ளியில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். 

மீதம் உள்ள ரயில் பயணிகளை இரவு நேரத்தில் பயணிகளை மீட்பது சிரமம் என்பதால் இன்று பயணிகள் அனைவரும் மீட்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது அதன்பின்னர் அவர்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். 

ரெயில்வேயின் என்ஜினீயரிங் பிரிவு மற்றும் மற்ற துறைகளுடன் ஒருங்கிணைந்து சீரமைக்க தேவையான அனைத்து பொருட்களையும் உடனடியாக கொண்டு செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் ரெயிலில் சிக்கியுள்ள பயணிகளை மீட்கும் பணி தற்போது தொடங்கி உள்ளது. விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ பார்க்க:- கிளிக் செய்யவும்

https://twitter.com/rameshibn/status/1736644887582552260

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback