மிக்ஜாம் புயல் காரணமாக புதுச்சேரியில் 4 ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!
வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், டிசம்பர் 3 தேதி புயலாக வலுப்பெற உள்ளது. இந்த புயலுக்கு மிக்ஜாம் Michaung என பெயரிடப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் 5-ம் தேதி முற்பகலில் ஆந்திராவின் நெல்லூர் – மசூலிபட்டினத்திற்கு இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதனால் தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களும், டெல்டா மாவட்டங்களிலும் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், புயல் எச்சரிக்கையால் புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் மாவட்ட பள்ளிகளுக்கு டிசம்பர் 4-ம் தேதி விடுமுறை என புதுச்சேரி கல்வித்துறை அறிவித்துள்ளது.
Tags: புதுச்சேரி செய்திகள்

