Breaking News

4 மாவட்டங்கள் புயல் பாதித்த மாவட்டங்கள்| 6 மாவட்டங்கள் வெள்ளம் பாதித்த மாவட்டங்கள் என அறிவிப்பு முழு விவரம்

அட்மின் மீடியா
0

வங்கக்கடலில் டிசம்பர் 3 ம் தேதி உருவான ‘மிக்ஜாம்’ புயல் தீவிர புயலாக டிசம்பர் 6 ம் தேதி கரையை கடந்தது இதனால் தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையான பாதிக்கப்பட்டது. இதனால் புயல் பாதித்த மாவட்டங்களில்  உள்ளவர்களுக்கு நிவாரணமாக 6000 ரூபாய் வழங்கப்பட்டது

அதனை தொடர்ந்து வங்க கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவிய்தால்  தென்மாவட்டங்களில் கனமழை பெய்தது இதனால் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமாரி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் வரலாறு காணாத அதிகனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக பல இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. தொடர் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் வெள்ளம் பாதித்த மாவட்டங்களில்  நிவாரணமாக 6000 ரூபாய் வழங்கப்பட்டது

இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் புயல் பாதித்த மாவட்டங்களாக அரசானை வெளியிடப்பட்டுள்ளது


அதேபோல் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமாரி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் வெள்ளம் பாதித்த மாவட்டங்களாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அரசாணை வெளியிட்டுள்ளது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback