Breaking News

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் டிச 11 ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு பள்ளிகல்வி துறை

அட்மின் மீடியா
0

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் டிச 11 ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு பள்ளிகல்வி துறை 

மழையால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வரும் 11-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்:-

மழையால் புத்தகம், சீருடைகளை இழந்த பள்ளி மாணவர்களுக்கு புதிய புத்தகம், சீருடை வழங்க வேண்டும்

பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் மேலும் பள்ளி வளாகத்தில் இருக்கும் உடைந்த பொருட்களை கட்டட இடிபாடுகளையும் அகற்றிட வேண்டும், பள்ளிகளின் சுற்றுச்சுவர்கள் மிகுந்த ஈரப்பதத்துடன் இருக்கலாம், எனவே மாணவர்கள் செல்லாதவாறு தடுப்புகள் அமைக்க வேண்டும், விளையாட்டுத்திடலை மேடு பள்ளங்கள் இன்றி சமன்படுத்தி பள்ளி மாணவர்கள் விளையாடுவதற்கு ஏற்ற இடமாக மாற்ற வேண்டும் பள்ளியில் உள்ள அனைத்து அறைகளையும், வகுப்பறைகளையும் தூய்மைப்படுத்த வேண்டும்என பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.

Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback