Breaking News

நாகை மாவட்டத்தில் 30 ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

அட்மின் மீடியா
0
தமிழகம் முழுவதும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி வருகின்றார்கள் 
 
நாகை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- நாகையில் உள்ள தனி யார் பள்ளியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாபெரும் சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 30-ந்தேதி (சனிக்கிழமை ) காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடக்கிறது. 
 

இந்த முகாமில் 18 வயதிலிருந்து 35 வயதிற்குட்பட்ட ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம்.

 8-ம் வகுப்பு தேர்ச்சி, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, கலை, அறிவியல், வணிகப் பட்டதாரிகள், ஐ.டி.ஐ., டிப்ளமோ, பொறியியல் மற்றும் தையல்கலை பயிற்சி பெற்றவர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம். 

இதில் 150-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள நாகை www.tnprivatejobs.tn.gov.in  என்ர இணையதளத்தில் தங்களுடைய கல்வி தகுதி குறித்த விவரங்கள் முன்னரே பதிவு செய்து கொள்ளலாம்.

முகாமிற்கு வரும் போது பயனாளர் குறியீடு மற்றும் கடவுச் சொல் ஆகியவற்றை தெரிவித்து கலந்து கொள்ள வேண்டும். இம்முகாமில் கலந்துகொள்பவர்கள் தங்களின் புகைப்படம், கல் விச்சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் சுயவிவர குறிப்பு ஆகியவற்றின் நகலுடன் கொண்டு பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நாள்:- Mega Job Fair - 30 December 2023

இடம்:- Aadharsh Matriculation Higher Secondary School ,Near New Bus Stand , Nagapattinam Near Librairy

நேரம்:- 09:00 AM to 04:00 PM

மேலும் விவரங்களுக்கு:- 

இங்கு கிளிக் செய்யவும்:-

https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_jobfairlist_single/272312230012

Tags: தமிழக செய்திகள் வேலைவாய்ப்பு

Give Us Your Feedback