வெள்ளத்தில் உயிரிழந்த இளைஞரின் உடல் 3 நாட்களுக்கு பிறகு மீட்பு
சென்னையில் மிக்ஜாம் புயல் மற்றும் வரலாறு காணாத இடைவிடாமல் பெய்த கன மழையினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மிக்ஜாம் புயலால் சென்னையில் டிசம்பர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் பெய்த மிக கன மழையால் பெரும்பாலான இடங்கள் நீரில் மூழ்கின
முக்கியமாக சென்னையின் போரூர், வேளச்சேரி, மேடவாக்கம், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, முடிச்சூர், மேற்கு தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. மரங்கள், முறிந்து விழுந்துள்ளன. மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. சாலைகளில் வெள்ளநீர் தேங்கியது. இதன் காரணமாக பேருந்து போக்குவரத்து, ரயில் சேவை ஆகியவை பாதிக்கப்பட்டன
இந்நிலையில் சென்னை பள்ளிக்கரணையில் கடந்த 4-ஆம் தேதி பெருவெள்ளத்தில் சிக்கி முருகன் என்பவர் உயிரிழந்துள்ளார் 3 நாட்களுக்கு பிறகு அவரது சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. நிவாரண முகாமில் இருந்த முருகன், வீட்டிலிருந்த தந்தையை பார்த்துவிட்டு வரும் போது நீரில் சிக்கி இறந்துள்ளார் என முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது
தகவல் அறிந்த பள்ளிக்கரணை போலீசார் தேசிய பேரிடர் மேலாண்மை படையினர் உதவியுடன் உடலை மீட்டனர். இந்த சம்பவம் அப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags: தமிழக செய்திகள்