துபாயில் உள்ள இன்டர்நேஷனல் சிட்டி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஒருவர் பலி, 2 பேர் படுகாயம்
துபாயில் உள்ள இன்டர்நேஷனல் சிட்டி கட்டிடத்தில் நேற்று இரவு பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும், இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்
நேற்று இரவு ஏற்பட்ட தீவிபத்து ஏற்பட்டவுடன் சில நொடிகளில் கட்டிடம் முழுவதும் புகை மண்டலமாக மாறியது.சம்பவத்தை கேள்விபட்ட தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தீயை வெற்றிகரமாக கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மேலும் அந்த கட்டிடத்தில் இருந்த குடியிறுப்பாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அவர்கள் அனைவரையும் உடனடியாக கட்டிடத்தில் இருந்து வெளியேற்றினார்கள் இதனால் பெரும் உயிரிழப்பு தடுக்கப்பட்டுள்ளது விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகக் கூறிய அதிகாரிகள், இதுவரை தீ விபத்துக்கான காரணத்தை வெளியிடவில்லை.
Tags: வெளிநாட்டு செய்திகள்
