அரசு வேலை கிடைத்த 24 மணிநேரத்தில் இளைஞரைக் கடத்தி துப்பாக்கி முனையில் மகளுக்கு தாலி கட்டச் செய்த பாசக்கார தந்தை
அரசு வேலை கிடைத்த 24 மணிநேரத்தில் இளைஞரைக் கடத்தி துப்பாக்கி முனையில் மகளுக்கு தாலி கட்டச் செய்த பாசக்கார தந்தை
பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் வசித்து வருபவர் கெளதம் குமார். இவருக்கு வயது 26. இவர் எம்ஏ., எம்.பில். பட்டதாரி. தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து கொண்டே அரசுப் பணிக்கான தேர்வுகளையும் எழுதிவந்துள்ளார்
இந்நிலையில் பீகார் அரசு தேர்வாணையத் தேர்வில் கெளதம் குமார் வெற்றி பெற்றார். இந்நிலையில் கடந்த புதன்கிழமை பள்ளிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை .பெற்றோர் காவல் நிலையத்தில் தங்கள் மகனைக் காணவில்லை என்று புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். கிடைத்த தகவலின் அடிப்படையில் கௌதம் இருக்கும் இடம் தேடி கண்டுபிடித்த போலிசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது
போலீசாரை கண்ட கௌதம் செங்கல் சூளை தொழிலதிபர் ராஜேஷ் ராய் என்பவர் என்னை துப்பாக்கி முனையில் வைத்து தன்னைக் கடத்தி வந்து அவரது மகளுக்கு கட்டாயம் திருமணம் செய்து வைத்ததாக கூறி கதறி அழுதுள்ளார்
பெண்ணின் தந்தையிடம் விசாரித்ததில் ”எனது மகளுக்கு அரசு வேலை பார்க்கும் மாப்பிள்ளையை தான் கட்டி வைக்க வேண்டும் என சிறு வயதிலேயே உறுதி எடுத்தேன். அதனால் அரசு வேலை கிடைக்கப் பெற்ற கெளதம் குமாரை கடத்திச் வந்து, எனது மகளுக்கு திருமணம் செய்து வைத்தேன்” எனக் கூறியுள்ளார்.
இதன் அடிப்படையில் கட்டாயத் திருமணம் செய்தல் பிரிவின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றார்கள்,இந்த திருமணத்தை ரத்து செய்வது குறித்து நீதிமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும் என போலீஸார் கூறியுள்ளார்கள்
Tags: இந்திய செய்திகள்
