Breaking News

இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 20 ஆயிரம் பாலஸ்தீனர்கள் பலி! தொடரும் போர் ! காஸாவின் தற்போதைய நிலை என்ன முழு விவரம்

அட்மின் மீடியா
0

இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 20 ஆயிரம் பாலஸ்தீனர்கள் பலி! தொடரும் போர் ! காஸாவின் தற்போதைய நிலை என்ன முழு விவரம்

இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே உள்ள பிரச்சனையை இரண்டாக பிரிக்கலாம். ஒன்று இஸ்ரேல் என்ற நாடு உருவாவதற்கு முன் 

கி.பி 1516 முதல் 20 ம் நூற்றாண்டு வரை மத்திய கிழக்கில் உள்ள பாலஸ்தீன பகுதி, ஒட்டோமான் பேரரசின் ஒரு பகுதியாக இருந்து வந்தது. முதல் உலக போரின்போது பாலஸ்தீன பகுதியை ஆண்டு வந்த ஆட்சியாளர் தோல்வி அடைந்ததை தொடர்ந்து, அந்த பகுதியை ஆங்கிலேயர்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.ஒட்டோமான் (இஸ்லாமிய) பேரரசுக்கு உட்பட்ட பகுதியாக இருந்த பாலஸ்தீனத்தில் யூதர்கள் குடியேறினர்.

1922 ஆம் ஆண்டில், 11% ஆக இருந்த யூதர்களின் எண்ணிக்கை, 1945 ல் அதாவது இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு 33% ஆக உயர்ந்தது. 

இதைத்தொடர்ந்து, தங்கள் மண்ணில், யூதர்கள் குடியேறுவதை எதிர்த்து அரேபியர்கள், 1936 முதல் 1939 வரை பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.

பாலஸ்தீனத்தில் யூதர்கள் சிறுபான்மையினராகவும் அரபு மக்கள் பெரும்பான்மையினராகவும் வாழ்ந்து வந்தனர். பாலஸ்தீன பகுதியில் யூதர்களுக்கு என தனி நாட்டை நிறுவ வேண்டும் என சர்வதேச அளவில் அழுத்தம் எழுந்ததை தொடர்ந்து கடந்த 1947ஆம் ஆண்டு, இந்த பிரச்சினைக்கு தீர்வு காண ஐக்கிய நாடுகள், திட்டம் ஒன்றை முன்வைத்தது. அதன்படி, பாலஸ்தீனத்தை இரண்டாக பிரிக்க முடிவு செய்யப்பட்டது. யூதர்களுக்கு தனியாக ஒரு நாடும், அரேபியர்களுக்கு தனியாக ஒரு நாடும் ஜெருசலேத்தை சர்வதேச நகரமாக அறிவிக்கவும் யோசனை முன்வைத்து ஐக்கிய நாடுகள் வாக்களித்தது.

அதன்பின்பு கடந்த 1948ஆம் ஆண்டு, இந்த பிரச்னையை தீர்க்க முடியாத காரணத்தால் இஸ்ரேல் என்ற தனிநாடு பிறந்துவிட்டதாக யூதத் தலைவர்கள் அறிவித்தனர். 

1948 மே 14 அன்று, யூதர்கள் தங்கள் நாட்டிற்கு இஸ்ரேல் என்று பெயரை அறிவித்தனர். அதைத்தொடர்ந்து, அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் போர் மூண்டது. யூதர்களின் கொடூர தாக்குதலால், 80% பாலஸ்தீன மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக இடம் பெயர்ந்தனர்

கடந்த 2007 ஆம் ஆண்டு இஸ்லாமிய இயக்கமான ஹமாஸ் ஆட்சியை கைப்பற்றிய பின்னர் காசா மீது இஸ்ரேல் முற்றுகையைத் தொடங்கியது.காசா பகுதி தங்களுடையது எனக் கூறி இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக பிரச்சனைகள் நடந்து வந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு நாடுகளுக்கும் இடையே இதுவரை நான்கு முறை போர் நடந்துள்ளது.

இந்நிலையில் கடந்த அக்டோபர் 7ம் தேதி மீண்டும் ஆரம்பித்த போர் தற்போதும் தொடர்ந்து நடந்து வருகின்றது

மேலும் கடந்த வாரம்  காசாவில் 4 நாட்களுக்கு போர் நிறுத்தம் செய்யப்பட்டது இந்தக் காலக்கட்டத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட 50 பிணைக் கைதிகளை ஹமாஸ் குழுவினர் விடுவிக்கப்பட்டர்கள், அதன்பின்பு மீண்டும் போர் துவங்கியுள்ளது

இந்த முறை தெற்கு காசாவை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் மிகவும் ஆக்ரோஷமான தாக்குதல்களை நடத்தி வருகிறது. காசாவில் இஸ்ரேல் போர் விமானங்கள் இரவு, பகல் பாராமல் குண்டு மழை பொழிந்து வருகின்றன

தற்போது காசாவில் எங்கு பார்த்தாலும் கட்டிட குவியல் தான் உள்ளது, மேலும் தினமும் உயிருக்கு அஞ்சி உள்ள நிலையில் வீரத்துடன் இருக்கும் மக்கள், தினசரி உணவிற்க்கு, குடிநீருக்கு தட்டுப்பாடு என செயற்கையான இந்தப் பஞ்சம் பல லட்சம் மக்களின் வாழ்வைக் கேள்விகுறிக்குள்ளாக்கியுள்ளது

காசாவில் நிவாணர பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள். உணவு, தண்ணீர், மருந்து ஆகியவற்றுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கடந்த 48 மணிநேரத்தில் 390 பேர் காசா நகரில் உயிரிழந்துள்ளார். 734 பேர் காயமடைந்தனர்.இதுவரை காசா நகரில் பொதுமக்கள் , ஹமாஸ் அமைப்பினர் என 20,057 பேர் உயிரிழந்தனர் என்றும் அதில் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் என்றும் 53,320 பேர் போரில் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், காசாவில் உள்ள போராளிக் குழுவை ஒழிக்க நினைக்கும் இஸ்ரேலின் நோக்கம் தோல்வி அடையும்  எனவும் இஸ்ரேல், தொடர்ந்து தாக்குதல் நடத்தினால், அது பணயக்கைதிகளின் மரணத்திற்கு வழிவகுக்கும் என்று ஹமாஸ் அமைப்பு கூறியுள்ளது.

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback