Breaking News

2 ரூபாயில் புற்றுநோய் பாதித்தவர்கள் பசியின்மையை போக்க மருந்து கண்டுபிடித்த ஜிப்மர் மருத்துவனை

அட்மின் மீடியா
0

பொதுவாக புற்றுநோய் பாதித்தவர்கள், கீமோதபி சிகிச்சையை பெறுகின்றனர்.கீமோதெரபி என்பது புற்றுநோய் உயிரணுக்களை அழிக்கின்றது மேலும் அதன் வளர்ச்சியை குறைக்கின்றது



மேலும் இந்த கீமோ சிகிச்சையால் புற்று நோய் பாதித்த செல்களை மட்டும் அழிப்பதில்லை. அவை உடல் முழுவதும், அதாவது, வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் உள்ள அனைத்து செல்களிலும் தாக்கத்தை ஏற்படுத்துவதால் ஆரோக்கியமான செல்களும் பாதிக்கப்படுகின்றன.

கீமோதெரபியினால் ஏற்படும் பக்க விளைவுகள் பொதுவாக குமட்டல், வாந்தி, பசியின்மை, எடை இழப்பு, சோர்வு  மேலும் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைவதால், இரத்த சோகை மற்றும் தொற்றுநோய்களின் அபாயம் அதிகரிக்கிறது. 

கீமோதெரபி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு தலைமுடி இழப்பு என்பது வெளியில் தெரியும் வெளிப்படையான பாதிப்பாக இருக்கிறது. ஆனால் மற்ற பக்க விளைவுகள் மருந்தின் வகைக்கு ஏற்ப மாறுபடும், இதில் மிகவும் முக்கியமாக புற்று நோய் தாக்கியவர்களுக்கு இருக்கும் பசியின்மையை போக்க மருத்துவர்கள் ஆராய்சியில் ஈடுபட்டு வந்தனர்

இந்நிலையில் ஜிப்மர் மருத்துவமனையின் ஆராய்ச்சியில் நாள் ஒன்றுக்கு இரண்டு ரூபாய் செலவில் புற்றுநோயாளிகளுக்கு பசியின்மையை போக்கும் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது

News Source

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback