Breaking News

1281 அரசு மதரஸாக்களை பொதுப் பள்ளிகளாக மாற்றி அசாம் அரசு உத்தரவு

அட்மின் மீடியா
0

1281 அரசு மதரஸாக்களை பொதுப் பள்ளிகளாக மாற்றி உத்தரவிட்டுள்ளது அசாம் அரசு 

அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள 1,281 மதரஸாக்கள், நடுநிலை ஆங்கிலப் பள்ளிகளாக பெயர் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக, மாநிலக் கல்வி அமைச்சர் ரனோஜ் பெகு அறிவித்துள்ளார்



கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அசாம் மாநிலத்தில் உள்ள மோரிகான் மாவட்டத்திலுள்ள ஒரு மதரஸா, பயங்கரவாதக் குழுக்களுடன் தொடர்புடையதாகக் கூறி மதரசா ஆசிரியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டதையடுத்து, தொடர்ச்சியாகப் பல மதரஸாக்களை ஆளும் பாஜக அரசு மூடிவந்தது

இந்நிலையில் அசாம் மாநிலத்தில் உள்ள 1,281 மதரஸாக்களை, நடுநிலை ஆங்கிலப் பள்ளிகளாக பெயர் மாற்றம் செய்திருப்பதாக மாநிலக் கல்வி அமைச்சர் ரனோஜ் பெகு தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து அமைச்சர் ரனோஜ் பெகு டிவிட்டர் பக்

கத்தில்:-

அரசு மற்றும் அரசு உதவி பெறும் எம்.இ மதரஸாக்கள் அனைத்தையும் தடை செய்து அசாம் தொடக்கக் கல்வி இயக்குநர் அலுவலகம் கடந்த புதன்கிழமை உத்தரவு பிறப்பித்தது. 

அவை சாதாரண பள்ளிகளாக உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

அந்த பள்ளிகள் அனைத்தும் கல்வி வாரியத்தின் கீழ் பொதுப் பள்ளிகளாக மாற்றப்பட்டதன் விளைவாக, 1,281 எம்.இ மதரஸாக்களும் எம்.இ. பள்ளிகள் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக பதிவிட்டிருந்தார்.

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள் மார்க்க செய்தி

Give Us Your Feedback