ஜனவரி 1 முதல் அமலாகும் மாற்றங்கள் என்ன என்ன முழு விவரம்
ஜனவரி 1 முதல் அமலாகும் மாற்றங்கள் என்ன என்ன முழு விவரம்
டிமேட் கணக்கில் நாமினி இணைப்பு:-
வர்த்தக
கணக்குகளுக்கான டிமேட் அக்கவுண்ட் வைத்துள்ள வாடிக்கையாளர்கள் டிசம்பர் 31
ம் தேதிக்குள் தங்கள் நாமினியை இணைக்க வேண்டும். இல்லை என்றால் டிமேட்
கணக்கில் பங்குகளை வாங்குவதற்கும் விற்பதற்கும் தடை விதிக்கப்படும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது
10 ஆண்டுகள் ஆதார் அப்டேட் :-
டிசம்பர் 14ம் தேதி வரை ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பித்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கான கால அவகாசம் தற்போது மார்ச் 14, 2024 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வங்கி லாக்கர்:-
வங்கியில் லாக்கர் வைத்துள்ள வாடிக்கையாளர்கள் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் திருத்தப்பட்ட வங்கி லாக்கர் ஒப்பந்தத்தில் கையொப்பமிட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
சிலிண்டர் விலை உயர்வு:-
சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. மாதத்தின் முதல் நாளில் காஸ் சிலிண்டர் விலை மாறுகிறது. கடந்த சில ஆண்டுகளாக வீட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர்களின் விலையில் மாற்றங்கள் தொடர்ந்து காணப்படுகின்றன.
புதிய SIM Card வாங்குபவர்கள்:-
புதிய சிம்கார்டு வாங்குபவர்கள் ஜனவரி 1ஆம் தேதி முதல் புதிய சிம்கார்டுக்கு காகிதம் இல்லாமல் விண்ணப்பிக்கலாம். ஜனவரி 1 முதல் Paperless KYC முறை அமல்படுத்தப்படும் என தொலைத்தொடர்பு துறை அறிவித்துள்ளது.
UPI ஐடி முடக்கம்
Google Pay, PhonePe, Paytm ஒரு வருடத்திற்கும் மேலாக பயன்படுத்தப்படாமல் இருக்கும் UPIகள் வரும் டிசம்பர் 31ம் தேதி முதல் முடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் அந்த ஐடிக்கள் ஜனவரி 1ஆம் தேதி முதல் பயன்படுத்த முடியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது
Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள்
