Breaking News

Uttarkashi tunnel collapse சுரங்கத்தில் சிக்கி கொண்ட 41 பேர் நிலை என்ன வீடியோ வெளியீடு

அட்மின் மீடியா
0

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள உத்தரகாசியில், பிரம்மகால் – யமுனோத்ரி நெடுஞ்சாலை பகுதியில், சில்க்யாரா – தண்டல்கான் பகுதிக்கு இடையே சுரங்கபணிகள் நடைபெற்று வந்தன.



விபத்து:-

இந்த சுரங்கப் பாதை பணி நடந்து கொண்டு இருந்த போது சுரங்கபாதையின் நடுவில் கடந்த 12 ம் தேதி திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதனால் சுரங்கப் பாதையின் நடுவே பணியாற்றிய 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். 

மேலும் அந்த சுரங்கப் பாதைக்குள் சுமார் 1.5 கி.மீ. தொலைவு நீளம் உள்ளது இதனால் அவர்களின் உயிருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை, 

தற்போது 70 மீட்டர் தொலைவுக்கு மணல், கடினமான பாறைகள் சுரங்கத்தை மூடியிருக்கிறது. உட்பகுதியில்  1.5 கி.மீ தொலைவுக்கு மண் சரிவு இல்லை. அந்த பகுதியில்தான் 41 தொழிலாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர். 

அங்கு மின் விளக்கு வசதி இருக்கிறது. ஏற்கெனவே அமைக்கப்பட்ட குழாய்கள் வழியாக ஆக்சிஜன், உணவு வகைகள் அனுப்பப்படுகிறது.

மீட்பு பணி:-

சுரங்கத்தில் சிக்கி கொண்ட அந்த 41 பேரையும் மீட்க கடந்த 10 நாட்களாக பேரிடர் மீட்பு பணியினர் மும்முரமாக முயற்சித்து வருகின்றனர்

அவர்களை மீட்க முன்னதாக தோண்டப்பட்ட சுரங்கபாதையில் இடையில் பாறை இருந்தததால் மீட்பு பணி தடைபட்டது. 

41 பேரின் நிலை:-

சுரங்கத்தில் சிக்கி இருப்பவர்களுக்கு ஆக்சிஜன் மற்றும் உணவு பொருட்கள் ஆகியவை அனுப்ப சிறிய அளவிலான சிறிய பைப் போடப்பட்டுள்ளது.அதன் வழியாக தற்போது வரை ஆக்சிஜன், அவர்களுக்கு தேவையான உணவுகள் தேவையான மருந்துகள் அனுப்பப்பட்டு வருகின்றது

வீடியோ:-

இதனை தொடர்ந்து தற்போது அந்த சிறிய அளவிலான பைப் மூலம் எண்டோஸ்கோபி கேமிராவை உள்ளே வீடியோ எடுத்துள்ளார்கள் 

சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களின் முதல் வீடியோ வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில், சுரங்கப் பாதைக்குள் சிக்கிய 41 பேரில் சிலர், வாக்கி டாக்கி உதவியுடன் மீட்பு குழுவினருடன் பேசும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. 

தாங்கள் நலமுடன் தைரியமாக உள்ளதாகவும் நீங்கள் யாரும் அச்சப்படவேண்டாம் எனவும் தங்களை விரைவாக மீட்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அடுத்த கட்ட நடவடிக்கை:-

ஜேபிசி இயந்திரம் மூலம் மண் சரிவை அகற்ற முயற்சி செய்யப்பட்ட்டது. அப்போது மேலும் மண் சரிவு ஏற்பட்டதால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. 

அடுத்ததாக ராட்சத இயந்திரங்கள் வாயிலாக பக்கவாட்டில் துளையிட்டு இரும்பு குழாய்களை செலுத்த முயற்சி மேற்கொண்டதில் பெரிய பாறைகள் இருந்ததால் அந்த முயற்சியும் வெற்றி பெறவில்லை.

மீட்பு பணியினர் தற்போது சுரங்கத்தின் மேற்பகுதியில் 2 இடங்களை தேர்வு செய்துள்ளார். இந்த இரு இடங்களில் இருந்து  சுமார் 1.2 மீட்டர் விட்டத்தில் அடிப்பாகம் வரை துளையிடப்படும். இதன்மூலம் தொழிலாளர்களை மீட்க திட்டமிட்டு உள்ளார்கள் மேலும் இந்தப் பணிக்கு 5 நாட்கள் வரை ஆகலாம்.எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

வீடியோ பார்க்க:- இங்கு கிளிக் செய்யவும்

https://twitter.com/Benarasiyaa/status/1726803443082473517


அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள 

Follow as on google news             :- CLICK HERE 


Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback