Breaking News

tn govt job எழுத படிக்க தெரிந்தா போதும் தமிழக அரசில் காலியாக உள்ள ,இரவு காவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0

tn govt job எழுத படிக்க தெரிந்தா போதும் தமிழக அரசில் காலியாக உள்ள ,இரவு காவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

tamilnadu govt jobs 2023 தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள இரவு காவலர் காலிப் பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிக்கை வெளியாகியுள்ளது.



பணி:-

Night Watchman 

வயது வரம்பு:-

01.07.2023 அன்று குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு பூர்த்தி அடையாமல் இருக்க வேண்டும்.(01.07.2023 அன்றுள்ளவாறு) 

நிபந்தனைகள்:-

1. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தினை www.dharmapuri.tn.nic.in இணையதளத்திலும் தேசிய தொழில் நெறி வழிகாட்டு மைய இணையதளத்திலும் (National Career Service Portal) www.ncs.gov.in உள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும்.

2. இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, 13.11.2023 முதல் 21.11.2023 வரை அலுவலக வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 05.45 மணி வரை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (வளர்ச்சிப் பிரிவு), இரண்டாவது தளம், தருமபுரி - 636 705 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பப்பட வேண்டும்.

3. இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தில் உள்ள விவரங்கள் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத (கல்வி,வயது,இனசுழற்சி) விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். 

4. தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முக தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து நேர்காணல் கடிதம்(Call Letter) பின்னர் அனுப்பி வைக்கப்படும். 

5. தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். 

6. காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்படமாட்டாது. 7. எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback