தீபாவளியை முன்னிட்டு ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
தீபாவளியை முன்னிட்டு வருகின்ற 13, 25 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்கு விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வருகின்ற ஞாயிற்று கிழமை (நவம்பர் 12ஆம் தேதி) தீபாவளி பண்டிகை என்பதால், அன்றைய தினம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தீபாவளி தின விடுமுறையினை முன்னிட்டு, அதற்கு முன்னதாக பொதுமக்களுக்கு அனைத்து ரேஷன் பொருட்களும் கிடைக்க வேண்டும் என்பதால் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் நவம்பர் மாதம் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளும் திறந்து இருக்கும் எனவும், பொதுமக்களுக்கு அனைத்து ரேஷன் பொருட்களும் கிடைக்க வேண்டும் என்பதால், ரேஷன் கடை ஊழியர்கள் தங்கள் கடைகளில் உள்ள இருப்பை சரிபார்த்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நவம்பர் 5 ஞாயிற்று கிழமை வேலை நாளை ஈடுகட்டும் பொருட்டு, அடுத்து ஏதேனும் ஒரு நாள் விடுமுறை நாளாக அறிவிக்கப்படும் அதற்கான அறிவிப்பு பின்னர் வெளியாகும் எனவும் ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் தமிழக உணவுத்துறை குறிப்பிட்டுள்ளது. இந்த வேலை நாட்களை ஈடு செய்யும் வகையில், தீபாவளிக்கு அடுத்தநாள் (நவம்பர் 13ஆம் தேதி) திங்கட்கிழமை மற்றும் நவம்பர் 25 (சனிக்கிழமை) ஆகிய இரண்டு நாட்கள் ரேஷன் கடைகள் இயங்காது என தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் தெரிவித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்
