Breaking News

நாமக்கல் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வழக்கறிஞர் வெட்டி கொலை

அட்மின் மீடியா
0

நாமக்கல் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வழக்கறிஞர் மணிகண்டன் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டாா்.

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே வரகூரைச் சேர்ந்தவர் மணிகண்டன்(42). வழக்கறிஞரான இவர் வெள்ளிக்கிழமை இரவு எருமப்பட்டி-கஸ்தூரிபட்டி பிரிவு சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த போது மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.இரத்த வெள்ளத்தில் மணிகண்டன் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.



இதுகுறித்து தகவல் அறிந்த எருமப்பட்டி போலீசார் அங்கு சென்று மணிகண்டன் உடலை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு உடல் கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.கொலை செய்த மர்ம நபர்களை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் உயிரிழந்த மணிகண்டனை கொலை செய்த மர்ம நபர்களை விரைந்து கைது செய்யக் கோரி நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் சாலையில் அமர்ந்து சக வழக்கறிஞர்கள் மற்றும் உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback