செல்போனில் பேசிய போது மின்னல் தாக்கி வாலிபர் பலி முழு விவரம்
திருச்சி அருகே செல்போனில் பேசிக்கொண்டிருந்த வாலிபர் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பல்லவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகன் ஜெயக்குமார்(28). ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். நேற்று லால்குடி பகுதியில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை வெளுத்து வாங்கியது. க
இந்நிலையில் வீட்டிலிருந்த ஜெயக்குமார் ப்ளூடூத் மூலம் தனது செல்போனில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஜெயக்குமார் மீது இடி மின்னல் தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த ஜெயக்குமார் அங்கேயே மயங்கி விழுந்தார்
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு உடனே சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஜெயக்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து லால்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்னல் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இடி மின்னல் அடித்துக் கொண்டு இருக்கும் போது திறந்த வெளியில் நின்று செல்போன் பேசுவதை தவிர்க்க வேண்டும்
Tags: தமிழக செய்திகள்
