Breaking News

கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம் இதோ

அட்மின் மீடியா
0

கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடபட்டுள்ள மாவட்டங்கள் விவரம் இதோ

தென்னிந்திய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வங்க கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யுமென அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 

(நவம்பர் 04) 16 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை இருக்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக 04.11.2023 அன்று 

கன்னியாகுமரி, 

திருநெல்வேலி, 

தென்காசி, 

திண்டுக்கல் 

மதுரை

சென்னை

மயிலாடுதுறை

தேனி

சிவகங்கை

உள்ளிட்ட மாவட்டங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (நவம்பர் 04) விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது. 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback