சென்னை ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த இளம் பெண் மருத்துவர் மாராடைப்பால் மரணம்
உடற்பயிற்சி மையத்தில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த பெண் மருத்துவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மருத்துவர் அன்விதா இவருக்கு வயது 26 இவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் முடித்துவிட்டு தனியார் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வருகின்றார்
இவர் கீழ்ப்பாக்கத்தில் உடற்பயிற்சி மையத்தில் நேற்று முன்தினம் மாலை உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த போது இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்ததாகவும் கூறப்படுகிறது. உடனடியாக அவர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மருத்துவர்கள் சோதனை செய்ததில், அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் என அரசு மருத்துவர்கள் தெரிவித்தனர்.இந்த மரணம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
Tags: தமிழக செய்திகள்