Breaking News

ஆடம்பர சொகுசு கார்களை வாடகைக்கு விடுவதற்கு அனுமதி அளித்து போக்குவரத்துத் துறை உத்தரவு

அட்மின் மீடியா
0

all types of cars including luxury cars can be used as rental vehicles சொகுசு மற்றும் ஆடம்பரக் கார்களை வாடகைக்கு விடுவதற்கு அனுமதி அளித்து போக்குவரத்துத் துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது

 


தமிழகத்தை பொறுத்துவரை குறிப்பிட்ட வகை கார்கள் மட்டும் மஞ்சள் போர்டாக பதிவு செய்ய முடியும். தற்போது அந்த நிலையை மாற்றி அனைத்துவித கார்களையும் மற்றும் சொகுசு மற்றும் ஆடம்பர கார்களை வாடகைக்கு பயன்படுத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதுவரை ஸ்விப்ட், மாருதி சுசுகி, டாடா இண்டிகோ மற்றும் வேகன் ஆர் கார்கள் மட்டுமே மஞ்சள் போர்டுடன் வாடகைக்கு பயன்படுத்த அனுமதி இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது சொகுசு கார்கள் உள்ளிட்ட அனைத்து வகையான கார்களையும் பொதுப் போக்குவரத்து வாகனங்களாக (மஞ்சள் போர்டு) பதிவு செய்து இயக்க போக்குவரத்து துறை ஆணையர் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார் குறிப்பிட்ட கார் வகைகளை மட்டுமே வாடகை கார்களாக பயன்படுத்த முடியும் என்ற விதி மாற்றப்படுகிறது

 இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்:-

சொகுசு கார்கள் உட்பட அனைத்து வகையான கார்களையும் பொதுப் போக்குவரத்து வாகனங்களாக பதிவு செய்து இயக்க போக்குவரத்து துறை ஆணையர் அனுமதி வழங்கியுள்ளார். 

இந்த உத்தரவு மூலம் குறிப்பிட்ட கார் வகைகளை மட்டுமே வாடகை கார்களாக பயன்படுத்த முடியும் என்ற விதி மாற்றப்படுகிறது. இதன்மூலம் மற்ற மாநிலங்களைப் போல் தமிழகத்திலும் சொகுசு மற்றும் ஆடம்பரம் கார்கள் உட்பட அனைத்து வகை கார்களையும் பொது போக்குவரத்து வாகனங்களாக அதாவது மஞ்சள் போர்டு பதிவு செய்து வாடகைக்கு பயன்படுத்தலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது

தமிழகத்தில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையில் , அனைத்து வகை கார்களையும் வாடகை வாகனங்களாக பயன்படுத்த அனுமதி வழங்கபடுவதாக போக்குவரத்து துறை சார்பில் கூறப்ட்டுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை, சுற்றுலாத்துறை பயன்பாட்டிற்கு குறிப்பிட்ட வாகனங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற உத்தரவு அமலில் இருந்து வருகிறது.

order:

Attention of all officers is invited to the subject matter. As per the cited reference, it is hereby ordered that all Regional  Transport Officers are hereby directed to register all the passenger vehicles  under Transport vehicles category including the luxury segment vehicles and to issue permits without seeking permission from the STA / Government. This order comes into force with immediate effect.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback