Breaking News

சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் பள்ளிகல்விதுறை தகவல்

அட்மின் மீடியா
0

மழை விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும்.

கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் விடுமுறை நாட்களை ஈடுசெய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது



மழைக்காலம் முடிந்ததும் இனி சனிக்கிழமைகளில் வாரம் தோறும் பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறையில் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கையால் நாகை, மயிலாடுதுறை, கடலூர் ,விழுப்புரம், அரியலூர் ,திருவாரூர், தஞ்சாவூரில் திருவண்ணாமலை ஆகிய பள்ளி ,கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் மழை காரணமாக விடுமுறை விடப்பட்ட மாவட்டங்களில், விடுமுறை நாட்களை ஈடு செய்யும் விதமாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் என பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. சனிக்கிழமைகளில் பள்ளிகளை திறப்பது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களே முடிவெடுக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback