சிறுகுறு நிறுவனங்களுக்கு பீக் ஹவர் மின் கட்டணம் குறைப்பு தமிழக அரசு
சிறுகுறு நிறுவனங்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட தமிழக அரசு.
தமிழகத்தில் உள்ள சிறுகுறு தொழில் நிறுவனங்கள் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு பீக் ஹவரில் 25 சதவீதம் கூடுதலாக வசூலிக்கபடுகிறது.இந்த கூடுதல் பீக் ஹவர் மின்கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சிறுகுறு தொழில் நிறுவனங்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த பீக் ஹவர் கட்டணத்தை தற்போது தமிழக அரசு குறைத்துள்ளது.
அதன்படி, முன்பு 25 சதவீதம் கூடுதலாக விதிக்கப்பட்ட தொகையானது 15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.மேலும், சூரியசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்க இனி 50 சதவீத மூலப்பொருள் சலுகை வழங்கப்படும் எனவும் தமிழக அரசு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. பீக் ஹவர் கட்டண குறைப்பு சலுகை காரணமாக 188.79 கோடி ரூபாய் இழப்பும், சூரிய சக்தி மின்சார உற்பத்தி சலுகை காரணமாக 7.31 கோடிரூபாய் இழப்பீடும் ஏற்படும் என தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்
