முதலாம் ஆண்டு மாணவரை மொட்டையடித்து நிர்வாணப்படுத்தி ராகிங் 7 பேர் கைது முழு விவரம்
முதலாம் ஆண்டு மாணவரை மொட்டை அடித்து ராகிங் செய்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவையில் உள்ள தனியார் தொழில்நுட்ப கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்த மாணவர் ஒருவரை அதே கல்லூரியில் படிக்கும் சீனியர் மாணவர்கள் மொட்டையடித்து ராகிங் செய்துள்ளனர். ராகிங்கால் பாதிக்கப்பட்ட மாணவர் பீளமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவர் கல்லூரி முடிந்ததும் தனது அறைக்கு செல்லும் போதுஅதே கல்லூரியில் படிக்கும் 2-ம் ஆண்டு மாணவர்கள் தங்கள் அறைக்கு வருமாறு அழைத்தனர். ஆனால் அவர் வர மறுத்தார். இருந்தபோதிலும் சக மாணவர்கள், அவரை வலுக்கட்டாயமாக தங்கள் அறைக்கு இழுத்து சென்று அந்த மாணவரிடம், எங்களுக்கு மது குடிக்க பணம் வேண்டும் பணத்ம் கொடு என்று மிரட்டியுள்ளார்கள், அதற்க்கு என்னிடம் பணம் இல்லை என கூறியதால் ஆத்திரம் அடைந்த 2-ம் ஆண்டு மாணவர்கள், முதலாம் ஆண்டு மாணவரை சரமாரியாக தாக்கி அவருக்கு மொட்டையடித்து, அவரது உடைகளை களைந்து நிர்வாணப்படுத்தியுள்ளார்கள்
இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் மாணவர், மற்ரும் அவரது பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் ராகிங்கில் ஈடுபட்ட 7 மாணவர்களை போலீசார் கைது செய்தனர். மது குடிப்பதற்காக பணம் கேட்டு ஜூனியர் மாணவரை தாக்கி மொட்டையடித்து ராகிங் செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.முதலாம் ஆண்டு மாணவரை தாக்கி, மொட்டை அடித்து ராகிங் செய்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..
Tags: தமிழக செய்திகள்
