Breaking News

அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டணம் 50% உயர்வு! முழு விவரம்

அட்மின் மீடியா
0

அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டணம் உயர்த்தப்பட்டதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது

 


தற்போது அறிவித்துள்ள அறிவிப்பில் இளநிலை பொறியியல் படிப்பு தேர்வுக்கு 1 பேப்பர் தேர்வுக்கட்டணம் ரூ.150 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.225 ஆக உயர்த்தப்பட்டுள்ளது

அதே போல் இளநிலை செய்முறை சமர்ப்பிப்பு கட்டணம் ரூ.300 ஆக இருந்த தேர்வுக்கட்டணம் தற்போது ரூ.450 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

மேலும் முதுநிலை பொறியியல் மாணவர்களுக்கான தேர்வு செய்முறைக்கு ரூ.450 ஆக இருந்த தேர்வு கட்டணம் ரூ.650 ஆகஉயர்த்தப்பட்டுள்ளது.

அதே போல் முதுநிலை மாணவர்களுக்கான ஆய்வு கட்டுரை சமர்ப்பிக்க ரூ.600-ஆக இருந்த தேர்வு கட்டணம் ரூ.900 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் சான்றிதழ்கள் பெறுவதற்கான கட்டணம் ரூ.1,000 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.1550 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. என அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback