Breaking News

காசாவில் 4 நாட்கள் போர் நிறுத்தம் இஸ்ரேல் அறிவிப்பு காரணம் என்ன தெரியுமா

அட்மின் மீடியா
0

காசாவில் 4 நாட்கள் போர் நிறுத்தம் இஸ்ரேல் அறிவிப்பு காரணம் என்ன தெரியுமா

காசாவில் பிணைக்கைதிகளாக உள்ள 50 பெண்கள், குழந்தைகளை விடுவிப்பதற்காக 4-நாள் போர் நிறுத்தப்படுகிறது. 

மேலும் இஸ்ரேல் சிறையில் இருந்து 150 பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

46-வது நாளாக போர் நீடித்து வந்த நிலையில் 4 நாட்கள் போரை நிறுத்த இஸ்ரேல் மந்திரிசபை ஒப்புதல் வழங்கி உள்ளது

கடந்த 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து, ஹமாஸுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் ராணுவம் காசாவில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.


இஸ்ரேல் தாக்குதலில் 7,028 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இதில் 2,900 பேர் சிறுவர்கள் என்றும் கூறியுள்ள ஹமாஸ் 6,743 பேரின் பெயரை வெளியிட்டுள்ளது. இன்னும் 281 பேரின் உடலை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.அதேநேரத்தில் இஸ்ரேல் தரப்பில் 1,400 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு தரப்பினருக்கும் இடையே நடந்து கொண்டிருக்கும் இந்த தாக்குதலில் ஏராளமான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். மேலும், உலக நாடுகள், இந்த தாக்குதலுக்கு ஆதரவாகவும், எதிராகவும் குரல் கொடுத்து வருகின்றன.

அதில் பெரும்பாலான நாடுகள் காசா மீதான தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் என குரல் கொடுத்து வருகின்றன

இந்நிலையில் இஸ்ரேல் அரசு முதன்முறையாக காசாவில் 4 நாட்களுக்கு போர் நிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளது. 

இந்தக் காலக்கட்டத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட 50 பிணைக் கைதிகளை ஹமாஸ் குழுவினர் விடுவிப்பார்கள் என்று இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது. 

இருப்பினும் இது போர் நிறுத்தம் இல்லை என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெளிவுபடுத்தியுள்ளார். இது பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தம் மட்டுமே. போர்க்கால அமைச்சரவை கூடி இந்த முடிவை எடுத்துள்ளது என்று அவர் கூறினார்.

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback