Breaking News

காதல் திருமணம் செய்த 3வது நாளில் புதுமண தம்பதிகள் வெட்டி கொலை தூத்துக்குடியில் பரபரப்பு முழு விவரம்

அட்மின் மீடியா
0

தூத்துக்குடி முருகேசன் நகர் பகுதியில் காதல் திருமணம் செய்த இளம் தம்பதியினரை வெட்டி கொலை செய்த மர்ம நபர்களை சிப்காட் போலீஸார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி முருகேசன் நகரை சேர்ந்த வசந்தகுமார் என்பவரது மகன் மாரிச்செல்வம்(24). இவர் தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகின்றார்.



இவர் தூத்துக்குடி முருகேசன் நகரில் வாடகை வீட்டில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவரும் திரு.வி.க நகரை சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவரது மகள் கார்த்திகா (20) என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்கள்

இந்த நிலையில் இவர்கள் பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு, அதாவது கடந்த அக்.30 ஆம் தேதி பதிவு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் புதுமண தம்பதிகள் முருகேசன் நகரில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் தூத்துக்குடி முருகேசன் நகரில் உள்ள மாரி செல்வத்தின் வீட்டுக்கு இன்று மாலை வந்த மர்ம நபர்கள், மாரிச்செல்வம்- கார்த்திகா ஆகிய இருவரையும் அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவல் அறிந்த தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.மேலும் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த இரட்டை கொலை தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு கொலையாளிகளை தேடி வருகின்றனர். 

முதல்கட்ட விசாரணையில் கார்த்திகாவின் உறவினர்கள் இந்த கொலையில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. காதல் திருமணம் செய்து மூன்று நாட்களே ஆன கணவன் - மனைவி இரட்டைக் கொலை சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback