Breaking News

சென்னை மக்களே இந்த பகுதியில் 2 நாள் தண்ணீர் வராது! முழு விவரம்

அட்மின் மீடியா
0

சென்னை மக்களே இந்த பகுதியில் 2 நாள் தண்ணீர் வராது! முழு விவரம்

கோயம்பேடு காளியம்மன் கோயில் தெரு மற்றும் ஆற்காடு சாலையில் உள்ள அஞ்சலகம் அருகில் குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தால் (CMRL) மேற்கொள்ளப்படுவதால் 17.11.2023 அன்று காலை 07.00 மணி முதல் 18.11.2023 மாலை 07.00 மணி வரை மண்டலம்-8, 9, 10 மற்றும் 11-க்குட்பட்ட பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம். சென்னை குடிநீர் வாரியம் தகவல் 

 


கோயம்பேடு காளியம்மன் கோயில் தெரு மற்றும் ஆற்காடு சாலையில் உள்ள அஞ்சலகம் அருகில் குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தால் (CMRL) மேற்கொள்ளப்பட உள்ளதால் சூளைமேடு நீர் பகிர்மான நிலையம் மற்றும் வள்ளுவர்கோட்டத்தில் உள்ள புதிய நீர் பகிர்மான நிலையம் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட உள்ளது. 

ஆகையால், 17.11.2023 அன்று காலை 07.00 மணி முதல் 18.11.2023 மாலை 07.00 மணி வரை, 

மண்டலம்-8(அண்ணா நகர்) 

மண்டலம்-9(தேனாம்பேட்டை), 

மண்டலம்-10(கோடம்பாக்கம்) 

மற்றும் மண்டலம்-11(வளசரவாக்கம்)-க்குட்பட்ட 

கீழ்க்கண்ட பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. 

குடிநீர் நிறுத்தப்படும் பகுதிகள்:-

மண்டலம்-8 (அண்ணா நகர்) 

அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ காலனி, 

மண்டலம்-9 (தேனாம்பேட்டை)  சூளைமேடு நுங்கம்பாக்கம் ஆயிரம் விளக்கு கோபாலபுரம் தியாகராய நகர் (பகுதி) தேனாம்பேட்டை 

மண்டலம்-10 (கோடம்பாக்கம்) கோயம்பேடு சின்மயா நகர், விருகம்பாக்கம், சாலிகிராமம் வடபழனி, ரங்கராஜபுரம் தியாகராய நகர், மேற்கு மாம்பலம், அசோக் நகர், சி.ஐ.டி.நகர் 

மண்டலம்-11 (வளசரவாக்கம்) தாய்சா அடுக்குமாடி வளாகம் 

எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் (Dial for Water) குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் https://cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியினை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம். மேலும், குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback