திருவண்ணாமலை தீபத் திருவிழாவிற்க்கு 2700 சிறப்பு பேருந்துகள் முழு விவரம்
திருவண்ணாமலை தீபத் திருவிழாவிற்க்கு 2700 சிறப்பு பேருந்துகள் - 9 தற்காலிக பேருந்து நிலையங்கள்
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் 26 ம் தேதி மாலை 06.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
அதேபோல் தீபதிருவிழாவிற்க்கு மறுநாள் 27 ம் தேதி பௌர்ணமி கிரிவலம் நடைபெறும்
எனவே அண்ணாமலையார் பக்தர்கள் வசதிக்காக 25 ம் தேதி சனிக்கிழமை முதல் 27 ம் தேதி வரை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்:-
கார்த்திகை தீப திருவிழாவிற்கு 2700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது - மாண்புமிகு போக்குவரத்துதுறை அமைச்சர் திரு. எஸ்.எஸ். சிவசங்கர் அவர்கள் தகவல்
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் கார்த்திகை தீபத் திருநாள் 26/11/2023 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 06.00 மணிக்கு நடைபெறவுள்ளதை முன்னிட்டும், 27/11/2023 அன்று பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டும், 25/11/2023 சனிக்கிழமை முதல் 27/11/2023 வரை அனைத்து பக்தர்கள் மற்றும் பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பாக சிறப்பு பேருந்துகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி,
சென்னையிலிருந்தும், தமிழ்நாட்டின் பிற முக்கிய நகரங்கள் மற்றும் அண்டை மாநிலங்களான பெங்களூரு, புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்தும் மேற்கண்ட நாட்களில் 2700 சிறப்பு பேருந்துகள் மூலம் 6947 நடைகள் பக்தர்கள் வசதிக்காக இயக்கப்பட உள்ளது.
மேலும், திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள 9 தற்காலிக பேருந்து நிலையங்களிலிருந்து பக்தர்கள் கிரிவலப் பாதை சென்று திரும்பி வருவதற்கு வசதியாக 40 சிற்றுந்துகள் பயணிகள் கட்டணமில்லா சிற்றுந்துகளாக இயக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பயணிகள் தங்களின் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு பயணம் செய்ய ஏதுவாக https://www.tnstc.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
தற்காலிக பேருந்து நிலையம் மற்றும் பேருந்துகள் புறப்படும் இடங்கள் ஆகிய விவரம்.
தற்காலிக பேருந்து நிலையம் திருவண்ணாமலை
- வேலூர் ரோடு Anna Arch பேருந்து நிலையத்தில் இருந்து போளூர், வேலூர், ஆரணி, ஆற்காடு, செய்யாறு மார்க்கமாக பேருந்து செல்லும்
- அவரலூர்பேட்டை ரோடு - SRGDS பள்ளி எதிரில் பேருந்து நிலையத்தில் இருந்து சேத்துப்பட்டு, வந்தவாசி, காஞ்சிபுரம் மார்க்கமாக பேருந்து செல்லும்
- திண்டிவனம் ரோடு - ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் பேருந்து நிலையத்தில் இருந்து செஞ்சி, திண்டிவனம், புதுச்சேரி, தாம்பரம், அடையாறு, கோயம்பேடு மார்க்கமாக பேருந்து செல்லும்
- வேட்டவலம் ரோடு - சர்வேயர் நகர் பேருந்து நிலையத்தில் இருந்து வேட்டவலம், விழுப்பரம் மார்க்கமாக பேருந்து செல்லும்
- திருக்கோயிலூர் ரோடு - ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில், அருணை மருத்துவக் கல்லூரி அருகில் மற்றும் வெற்றி நகர் பேருந்து நிலையத்தில் இருந்து திருக்கோயிலூர், பண்ருட்டி, கடலூர், சிதம்பரம், கும்பகோணம், திட்டக்குடி, விருத்தாச்சலம், நாகப்பட்டினம், திருச்சி, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி மார்க்கமாக பேருந்து செல்லும்
- மணலூர்பேட்டை ரோடு - செந்தமிழ் நகர் பேருந்து நிலையத்தில் இருந்து மணலூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, தானிப்பாடி, சாத்தனூர் அணை மார்க்கமாக பேருந்து செல்லும்
- செங்கம் ரோடு - அத்தியந்தல் மற்றும் சுபிக்க்ஷா கார்டன் பேருந்து நிலையத்தில் இருந்து செங்கம், தருமபுரி, திருப்பத்தூர், சேலம், பெங்களூர், ஓசூர், ஈரோடு, கோயம்புத்தூர் மார்க்கமாக பேருந்து செல்லும்
- காஞ்சி ரோடு - டான் பாஸ்கோ பள்ளி பேருந்து நிலையத்தில் இருந்து காஞ்சி, மேல்சோழங்குப்பம்
மேலும், பயணிகள் அடர்வு குறையும் வரை தேவைக்கு ஏற்ப பேருந்துகளை இயக்கிடவும், பக்தர்களுக்கு எவ்விதமான அசௌகரியம் ஏற்படாமல் அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ள போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர்களுக்கு தகுந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது என மாண்புமிகு போக்குவரத்துதுறை அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள்
