Breaking News

தீபாவளி நாளில் 2 மணிநேரத்திற்க்கு பிறகு பட்டாசு வெடிப்பவர்களை பிடிக்க தனிப்படை அமைப்பு

அட்மின் மீடியா
0

தீபாவளி நாளில் இந்த ஆண்டும் 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி - தமிழக அரசு காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதி தீபாவளி நாளில் 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் 2 மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது

 


தீபாவளி நாளில் காலை 6 மணி முதல் காலை 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதி அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் தீபாவளி அன்று நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடிப்பவர்களை கண்காணிக்க தனிப்படையை சென்னை காவல்துறை அமைத்துள்ளது. 

தனிப்படை காவலர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில், ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். அச்சமயம் 2 மணி நேரத்தை தாண்டி பட்டாசு வெடிப்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு காவலர்களால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே தீபாவளியை முன்னிட்டு சென்னைமாநகரின் முக்கிய இடங்களில் சுமார் 18,000 போலீஸார் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback