புதுச்சேரியிலும் தீபாவளிக்கு மறுநாள் 13 ம் தேதி விடுமுறை அறிவிப்பு
புதுச்சேரியிலும் தீபாவளிக்கு மறுநாள் 13 ம் தேதி விடுமுறை அறிவிப்பு
தமிழகத்தைப் போல புதுச்சேரியிலும் திங்கட்கிழமை அன்று விடுமுறை அளித்து புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக வெளியான அறிக்கையில்:-
தீபாவளி பண்டிகை 12.11.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று வருகின்றது. சனி மற்றும் ஞாயிறு ஆகியவை வழக்கமான வார விடுமுறை நாட்கள்.திங்கட்கிழமை வேலை நாட்களாக கொண்டால் தீபாவளி அன்று பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை இருக்கும்.இதனால், பண்டிகையை கொண்டாட முடியாது. எனவே புதுவையிலும் திங்கட்கிழமை 13.11.2023 அன்று அரசு விடுமுறை அளித்து புதுச்சேரி மக்கள் தீபாவளி பண்டிகையை முழுமையாக மகிழ்ச்சியுடன் கொண்டாட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Tags: புதுச்சேரி செய்திகள்
