Breaking News

12 ம் வகுப்பில் பயாலஜி படிக்காதவர்களும் இனி மருத்துவராகலாம் - தேசிய மருத்துவ ஆணையம்

அட்மின் மீடியா
0

11,12 ஆம் வகுப்பில் பயாலஜி படிக்காதவர்களும் இனி மருத்துவராகலாம், தேசிய கல்விக் கொள்கையின்படி தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது.

மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளில் உயிரியல் பாடப் பிரிவைத் தேர்ந்தெடுத்து அதில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது விதிமுறையாக இருந்தது. 



இதற்கிடையே இந்த விதியில் இப்போது மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி இனிமேல், இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதத்தை முக்கிய பாடங்களாகக் கொண்டு 10+2 தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மருத்துவம் படிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவருமே நீட் தகுதித் தேர்வை எழுதலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதாவது மொழி பாடத்துடன் இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது உயிர் தொழில்நுட்பம் போன்ற பாடங்களில் தேர்ச்சி பெற்று, மருத்துவ படிப்புக்கான நீட் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

இந்நிலையில் தற்போது தேசிய கல்விக் கொள்கையின்படி தேசிய மருத்துவ ஆணையம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, 11,12 ஆம் வகுப்பில் பயாலஜி படிக்காதவர்களும் இனி மருத்துவராகலாம், தேசிய கல்விக் கொள்கையின்படி தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது. 

பயாலஜி படிக்காதவர்கள் தனியாக உயிரியல் பாடம் படித்து தேர்வு எழுத வேண்டியிருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது. முந்தைய விதிகளின்படி 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பிறகு, மாணவர்கள் கூடுதல் பாடங்களை எடுக்க அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.

மருத்துவ படிப்புகளான இடங்கள் அனைத்தும் நீட் தேர்வு மூலமாக நடத்தப்பட்டு வருகிறது. மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளில் உயிரியல் பாடப் பிரிவைத் தேர்ந்தெடுத்து அதில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது விதிமுறையாக இருந்தது. 

இந்நிலையில், இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதத்தை முக்கிய பாடங்களாகக் கொண்டு உயர்நிலை படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மருத்துவம் படிக்கலாம்.அவர்கள் அனைவருமே நீட் தகுதித் தேர்வை எழுதலாம் என தேசிய கல்விக் கொள்கையின்படி தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது.

உயிரியலை முக்கியப் பாடமாக பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ந்தெடுக்கவில்லை என்றாலும் மருத்துவப் படிப்பு படிக்கலாம் என்றுதான் தேசிய மருத்துவ ஆணையம் கூறுகிறது.அதாவது இயற்பியல், வேதியியல், கணிதம், கணினி அறிவியல் பாடப் பிரிவில் படிப்பவர்களும், உயிரியல் பாடத்தை பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பிறகு கூடுதலாகப் படித்து மருத்துவப் படிப்பில் சேரலாம்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback