Breaking News

EB பில் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என வரும் மெசஜ் எச்சரிக்கையாக இருங்கள்

அட்மின் மீடியா
0

EB பில் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என வரும் மெசஜ் எச்சரிக்கையாக இருங்கள் என மின் வாரியம் தெரிவித்துள்ளது



கடந்த சில நாட்களாக சில மின்நுகர்வோர்களுக்கு நீங்கள் ஈ.பி பில் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என குறிப்பிடப்பட்டு இருந்துள்ளது. இதனை நம்பிய சில மின்நுகர்வோர்கள் அந்த குருஞ்செய்தியில் வந்த எண்ணுக்கு பணத்தை அணுப்பி தங்களது பணத்தை இழந்துள்ளனர். 

இந்நிலையில் மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்:-

ஈ.பி பில் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என குறுஞ்செய்தி வந்தால் கவனம்!1. பதட்டம் அடைய வேண்டாம்2. உங்கள் பில் நிலைப்பாடு சரி பார்க்கவும்3. அந்த எண்ணை தொடர்பு கொள்ள வேண்டாம்4. இணைய லிங்கக்கை கிளிக் செய்ய வேண்டாம்5. உடனடியாக 1930 ஐ அழைத்து புகார் அளிக்கவும்6. உறவினர்கள், நண்பர்களுக்கு தகவலை பகிரவும்இது ஒரு மோசடி மெசேஜ்! என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மின்சார கட்டண செலுத்தும் மோசடியிலிருந்து பாதுகாத்துக்கொள்ள இதோ சில குறிப்புகள்: 

1. குறுஞ்செய்தி வந்த எண்ணை சரிபார்க்கவும். நம்பகமற்ற எண்ணாக இருந்தால் புறக்கணிக்கவும். 

2. செய்தியில் எழுத்து பிழைகள் இருக்கும். 

3. சைபர் பாதுகாப்பு இலச்சினையான https:// மற்றும் பூட்டு 🔒 இல்லாமல் இருக்கும். 

4. தொடர்பு கொள்பவர் வேற்றுமொழி உச்சரிப்புடன் பேசுவர். 

5. சிறிய தொகையான ₹10 மட்டும் செலுத்தினால் போதும் என்று கூறுவர். உடனே எச்சரிக்கை ஆகி புகார் அளிக்கப்படும் எனக் கூறி இணைப்பை துண்டிக்கவும். 

புகார் அளிக்க: கட்டணமில்லா தொலைபேசி 1930

Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி

Give Us Your Feedback