Breaking News

ரேஷன் கடைகளில் இனி யுபிஐ மூலம் பணம் செலுத்தலாம்..முழு விவரம்

அட்மின் மீடியா
0

ரேஷன் கடைகளில் UPI வசதி இன்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது



தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் பொருட்களை வாங்கிக் கொள்ளும் முறை விரைவில் அமல்படுத்தப்படும் என பேரவையில் கூட்டுறவு துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். இந்த சூழலில் தற்போது இந்த சேவை சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் அம்பத்தூர், ஆவடி புறநகர் பகுதிகளில் உள்ள 588 நியாய விலைக் கடைகளில் 562 கடைகளில் UPI மூலம் பணம் செலுத்தி ரேசன் பொருட்களை பெற்றுக்கொள்ள நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள கடைகளில் விரைவில் நடைமுறை படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மொபைல் முத்தம்மா' என்ற பெயரில், எப்படி பணம் இல்லாமல் மொபைல் மூலம் பொருட்களை வாங்கலாம் என ரேசன் கடைகளில் விழிப்புணர்வு வாசகங்கள் வைக்கப்பட்டுள்ளது‌

இதன் மூலம் இனி நீங்கள் போன்பே, கூகுள் பே, பேடி எம் என உங்கள் பரிவர்த்தனைகளை மேற்கொள்லலாம்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback