ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு ஒருவர் கைது - நடந்தது என்ன? முழு விவரம்
ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு ஒருவர் கைது - நடந்தது என்ன? முழு விவரம்
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை முன்பு இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசினார். இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பெட்ரோல் குண்டு வீசிய நபரை மடக்கிப் பிடித்தனர்.அவர் தேனாம்பேட்டையைச் சேர்ந்த வினோத் என்பது தெரிய வந்துள்ளது. வினோத்திடம் இருந்து மேலும் 2 பெட்ரோல் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் கிண்டி காவல்நிலைய போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாரணையில் தான் சிறையில் இருந்த காலத்தில் வெளியே வர ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்துள்ளது.பிரபல ரவுடியான கருக்கா வினோத் பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில், கைதாகி கடந்த வாரம்தான் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். கருக்கா வினோத் கடந்த 2022ம் ஆண்டு பாஜக அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியது என்பவர் குறிப்பிடத்தக்கது.
கருக்கா வினோத் கடந்த வருடம், பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசி சென்றவர் என்பது குறிப்பிடக்கது. அப்போது சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கருக்கா வினோத் கைது செய்யப்பட்டு, கடந்த வாரம் தான் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த சம்பவம் தொடர்பாக சென்ன கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது
பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. பெட்ரோல் குண்டு வீசிய வினோத் மதுபோதையில் இருந்துள்ளார்.
ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் கொண்டு வீசப்படவில்லை. ஆளுநர் மாளிகை சர்தார் பட்டேல் சாலையில் உள்ள கேட்ற்க்கு முன்னர் இருக்கும் பேரிகார்டு வரை தான் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு உள்ளது.
கவர்னர் மாளிகைக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பில் எந்த குறைபாடும் இல்லை. வினோத் மீது ஏற்கனவே 7-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்று கூறினார்.
ஆளுநர் மாளிகை அருகில் பெட்ரோல் குண்டு வீச்சுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், “முஸ்லிம் சிறைவாசிகள் உள்ளிட்ட 49 ஆயுள் சிறைவாசிகளை முன்விடுதலை செய்யப் பரிந்துரைத்து தமிழ்நாடு அரசால் கடந்த ஆகஸ்ட் 24 அன்று ஆளுநருக்குக் கோப்பு அனுப்பப்பட்டது. இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில் தமிழ்நாட்டு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்கள் அக்கோப்பிற்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ளார்.
முஸ்லிம் சிறைவாசிகள் உள்ளிட்ட 49 ஆயுள் சிறைவாசிகளை முன் விடுதலைக்கான கோப்பிற்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தை வரும் அக்டோபர் 28 அன்று நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இன்று ஆளுநர் மாளிகை அருகில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக ரவுடி கருக்கா வினோத் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், செய்திகள் வருகின்றனர். ஆளுநர் மாளிகை அருகில் நடத்தப்பட்டிருக்கும் இந்தத் தாக்குதலை தமுமுக சார்பில் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
தமுமுக நடத்தவுள்ள ஜனநாயகப் போராட்டத்தை திசைச் திருப்பும் விதமாக இதுபோன்ற சம்பவத்தைச் சமூகவிரோதிகள் செய்துள்ளதாகக் கருத வேண்டியுள்ளது.
பெட்ரோல் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட நபரை மட்டும் கைது செய்யாமல் அவரது பின்னணியில் உள்ளவர்களையும் தமிழகக் காவல்துறை விசாரித்து விரைவில் கைது செய்ய வேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தைக் கட்டுக்கோப்புடன் திட்டமிட்டபடி அக்டோபர் 28 மாலை நடத்தும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Tags: தமிழக செய்திகள்
