Breaking News

ஹிஜாப் அணிந்து மாணவிகள் தேர்வு எழுதலாம்.! கர்நாடக கல்விதுறை அமைச்சர் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

கர்நாகடத்தில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்று அம்மாநில கல்வித்துறை அமைச்சர் எம்.சி.சுதாகர் தெரிவித்துள்ளார்.



கர்நாடக அரசுப் பள்ளியில் கடந்தாண்டு ஹிஜாப் அணிந்த முஸ்லிம் மாணவிகள் தேர்வு எழுத அனுமதிக்கப்படாததால் மாநிலம் முழுவதும் பெரும் போராட்டம் வெடித்தது. 

இதனிடையே, சில மாணவர்கள் காவித் துண்டு அணிந்து வந்து ஹிஜாப்புக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.இதனைத் தொடர்ந்து, கல்வி நிறுவனங்களில் சீருடையை தவிர பிற ஆடைகள் அணியக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மாணவிகள், கல்வி நிறுவனங்களில் இருக்கும் சீருடைகளை மட்டுமே அணிந்துகொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டு இருந்தது.

கர்நாடகத்தில் தற்போது ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ள நிலையில், முதல்வர் சித்தராமையா, கல்வித்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மாணவிகள் ஹிஜாப் அணியலாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடக முதல்வர் சித்தராமையா, மாநில கல்வி அமைச்சர் எம்.சி.சுதாகர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், 

மாணவிகள் தேர்வு எழுதும் போது ஹிஜாப் அணிந்து செல்ல அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதும் விவகாரத்தில் சிலர் தேவையில்லாத சர்ச்சையை ஏற்படுத்த முயல்கிறார்கள்.. இந்த விவகாரத்தில் சில குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே குழப்பத்தை ஏற்படுத்த முயல்கிறார்கள்.இப்போது அனைத்து தரப்பினரின் சுதந்திரத்தையும் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

ஹிஜாப் அணிந்து நீட் தேர்வு எழுத அனுமதி அளிக்கப்படுகிறது. தேர்வு எழுதும் மாணவிகள் தாங்கள் விரும்பும் ஆடைகளை அணிந்து தேர்வு எழுதலாம்கர்நாடக தேர்வாணையம் நடத்தும் அனைத்து தேர்வுகளிலும் தேர்வறையில் பெண்கள் ஹிஜாப் அணிய அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback