இஸ்ரேல் - பாலஸ்தீனம் பிரச்சனைதான் என்ன தற்போது என்ன நடக்கின்றது
இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே உள்ள பிரச்சனையை இரண்டாக பிரிக்கலாம். ஒன்று இஸ்ரேல் என்ற நாடு உருவாவதற்கு முன்
கி.பி 1516 முதல் 20 ம் நூற்றாண்டு வரை மத்திய கிழக்கில் உள்ள பாலஸ்தீன பகுதி, ஒட்டோமான் பேரரசின் ஒரு பகுதியாக இருந்து வந்தது. முதல் உலக போரின்போது பாலஸ்தீன பகுதியை ஆண்டு வந்த ஆட்சியாளர் தோல்வி அடைந்ததை தொடர்ந்து, அந்த பகுதியை ஆங்கிலேயர்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.ஒட்டோமான் (இஸ்லாமிய) பேரரசுக்கு உட்பட்ட பகுதியாக இருந்த பாலஸ்தீனத்தில் யூதர்கள் குடியேறினர்.
1922 ஆம் ஆண்டில், 11% ஆக இருந்த யூதர்களின் எண்ணிக்கை, 1945 ல் அதாவது இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு 33% ஆக உயர்ந்தது.
இதைத்தொடர்ந்து, தங்கள் மண்ணில், யூதர்கள் குடியேறுவதை எதிர்த்து அரேபியர்கள், 1936 முதல் 1939 வரை பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
பாலஸ்தீனத்தில் யூதர்கள் சிறுபான்மையினராகவும் அரபு மக்கள் பெரும்பான்மையினராகவும் வாழ்ந்து வந்தனர். பாலஸ்தீன பகுதியில் யூதர்களுக்கு என தனி நாட்டை நிறுவ வேண்டும் என சர்வதேச அளவில் அழுத்தம் எழுந்ததை தொடர்ந்து கடந்த 1947ஆம் ஆண்டு, இந்த பிரச்சினைக்கு தீர்வு காண ஐக்கிய நாடுகள், திட்டம் ஒன்றை முன்வைத்தது. அதன்படி, பாலஸ்தீனத்தை இரண்டாக பிரிக்க முடிவு செய்யப்பட்டது. யூதர்களுக்கு தனியாக ஒரு நாடும், அரேபியர்களுக்கு தனியாக ஒரு நாடும் ஜெருசலேத்தை சர்வதேச நகரமாக அறிவிக்கவும் யோசனை முன்வைத்து ஐக்கிய நாடுகள் வாக்களித்தது.
அதன்பின்பு கடந்த 1948ஆம் ஆண்டு, இந்த பிரச்னையை தீர்க்க முடியாத காரணத்தால் இஸ்ரேல் என்ற தனிநாடு பிறந்துவிட்டதாக யூதத் தலைவர்கள் அறிவித்தனர்.
1948 மே 14 அன்று, யூதர்கள் தங்கள் நாட்டிற்கு இஸ்ரேல் என்று பெயரை அறிவித்தனர். அதைத்தொடர்ந்து, அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் போர் மூண்டது. யூதர்களின் கொடூர தாக்குதலால், 80% பாலஸ்தீன மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக இடம் பெயர்ந்தனர்
கடந்த 2007 ஆம் ஆண்டு இஸ்லாமிய இயக்கமான ஹமாஸ் ஆட்சியை கைப்பற்றிய பின்னர் காசா மீது இஸ்ரேல் முற்றுகையைத் தொடங்கியது.காசா பகுதி தங்களுடையது எனக் கூறி இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக பிரச்சனைகள் நடந்து வந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு நாடுகளுக்கும் இடையே இதுவரை நான்கு முறை போர் நடந்துள்ளது.
காசா பகுதி தங்களுடையது எனக் கூறி இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக பிரச்சனைகள் நடந்து வந்த நிலையில் தென்மேற்கு பாலஸ்தீன பகுதியான காசாவில் இருந்து 5,000 பாலஸ்தீன ராக்கெட்டுகள் மூலம், மத்திய கிழக்கில் உள்ள நாடான இஸ்ரேல் மீது தொடர் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதனால் மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூண்டுள்ளது. இதற்கிடையில் இஸ்ரேல் அங்கு போர் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இஸ்ரேல்- ஹமாஸ் போர் எதிரொலியாக டெல்லியில் இருந்து இஸ்ரேல் தலைநகரான டெல் அவிவ்-விற்கு பயணிகளின் நலன் கருதி விமான சேவை ரத்து செய்வதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே நீண்டகாலமாகவே மோதலும், சண்டைகளும் நடந்திருந்தாலும், இதுபோன்ற ஒரு மோசமான தாக்குதல் இஸ்ரேல் மீது நடத்தப்பட்டது இல்லை. வான் வழியாகவும், தரை வழியாகவும் ஹமாஸ் படையினர் ஏவுகணை தாக்குதலை நடத்தியதில் இஸ்ரேலில் உள்ள முக்கிய நகரங்கள் நிலைக்குலைந்துள்ளன.
ஹமாஸ் படையினர் சுமார் 5000-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை கொண்டு நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஏராளமானோர் உயிரிழந்திருப்பதாக கூறப்படும் நிலையில், தற்போது பலி எண்ணிக்கையை இஸ்ரேல் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஹமாஸ் படையினர் நடத்திய தாக்குதலில் இதுவரை பெண்கள், குழந்தைகள் உட்பட 100 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 908 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் இஸ்ரேல் அரசு தெரிவித்திருக்கிறது.
மேலும், இது முதல்கட்ட அறிக்கை தான் என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்பு இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், படுகாயம் அடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது
மேலும் இஸ்ரேல் நகரங்களுக்குள் நுழைந்த ஹமாஸ் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி வருகின்றனர்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, நாங்கள் யுத்தம் செய்கிறோம். அதில் நாங்களே வெல்வோம். எங்களின் எதிரி யோசித்துப் பார்த்திராத விலையைக் கொடுக்க நேரிடும் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், பாலஸ்தீனத்துக்குள் அத்துமீறி குடியேறுபவர்களுக்கு எதிராகவும், பாலஸ்தீனத்தை ஆக்கிரமிக்கும் துருப்புகளின் பயங்கரவாதத்துக்கு எதிராகவும் தங்களை தற்காத்துக் கொள்ளும் உரிமை என்பது பாலஸ்தீனியர்களுக்கு உண்டு என்று பாலஸ்தீன அதிபர் முகம்மது அப்பாஸ் கூறியுள்ளார்
மேலும் பாலஸ்தீனத்தின் தாக்குதலுக்கு இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தியதில் கிட்டத்தட்ட 200 பாலஸ்தீனியர்கள் பலியாகியுள்ளனர் என தகவல்கள் வெளியாகி உள்ளது
இந்த நிலையில், தமிழகத்தை சேர்ந்த 15 பேர் ஜெருசலேமில் பணியாற்றுவதாகவும், போர் தீவிரமடைந்து வருவதால் தங்களை மீட்குமாறு தொலைபேசி மூலம் 15 தமிழர்களும் கோரிக்கை விடுத்ததாக அயலகத் தமிழர் நல வாரியம் தெரிவித்துள்ளது.
தங்களை தொடர்பு கொண்டால் இஸ்ரேலில் இந்திய தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அயலகத் தமிழர் நல வாரியம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், இஸ்ரேலில் உள்ள தமிழர்கள் உதவி பெற 8760248625, 9600023645 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: வெளிநாட்டு செய்திகள்
