Breaking News

குடி போதையில் காவல்நிலையத்தில் ரகளை ஜெயிலர் வில்லன் நடிகர் விநாயகன் கைது!

அட்மின் மீடியா
0

ஜெயிலர் படத்தில் தனது மிரட்டல் நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் விநாயகன். இவர் எர்ணாகுளம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 



போதையில் ரகளையில் ஈடுபட்டதாகவும், காவல்துறை அதிகாரியை தாக்கியதாகவும் இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் குடிபோதையில் தகராறு செய்ததாக விநாயகன் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விநாயகன் வீட்டில் இருந்து சத்தம் அதிகமாக வருவதாக அக்கம்பக்கத்தினர் கொடுத்த புகாரின் பேரில் அவரை போலீசார் கைது செய்தனர். குடிபோதையில் இருந்த நடிகர் எர்ணாகுளம் வடக்கு போலீஸ் நிலையத்தில் நுழைந்து ரகளை செய்துள்ளார், அதனால் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து இருக்கின்றனர். 

ஏற்கனவே கேரளா முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி மரணம் குறித்து முகநூலில் சர்ச்சைக்குரிய விடியோ பதிவிட்டு இவர் மீது கேரளா போலீசார் வழக்குப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback