Breaking News

டெல்லியில் துப்பாக்கிமுனையில் பெட்ரோல் பங்கில் கொள்ளை சிசிடிவி வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

மேற்கு டெல்லியின் முண்ட்கா பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கி முனையில் பெட்ரோல் பங்க் உதவியாளரிடம் சுமார் 10,000 ரூபாயை கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . 


இந்த சம்பவம் முழுவதுமாக சமூக வலைதளங்களில் வீடியோவாக வைரல் ஆகி வருகின்றது அதிகாலை 1.20 மணியளவில் இரண்டு பைக்குகளில் வந்த மர்ம நபர்கள்  உதவியாளரை தாக்கி பணத்தை கொள்ளையடிப்பதை வீடியோ காட்டுகிறது. இச்சம்பவம் செவ்வாய்கிழமை இடம்பெற்றுள்ளதுடன், பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

டெல்லியின் முண்ட்கா பகுதியில் ஆயுதம் ஏந்திய 6 கொள்ளையர்களால் பெட்ரோல் பங்க் புதன்கிழமை சூறையாடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சுமார் 6 கொள்ளையர்கள் பெட்ரோல் பங்க் ஊழியர்களை தாக்கி 10 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதை வீடியோவில் காணலாம். 

டெல்லியில் உள்ள முண்ட்கா கெவ்ரா மோட் பெட்ரோல் பம்பில் செவ்வாய்கிழமை (அக்டோபர் 10) இரவு 1.30 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

முகமூடி அணிந்த 6 பேர், பெட்ரோல் பம்ப் அருகே வந்து, அந்த ஊழியரிடம், பைக்கில் பெட்ரோல் நிரப்பச் சொன்னார்கள். அதில் ஒருவன் பையில் இருந்த துப்பாக்கியை எடுத்து ஊழியரை மிரட்டி பணத்தை பறிக்கின்றார் , மேலும் அவருடன் இருந்த மர்ம நபர்கள்  மற்ற ஊழியரையும் தாக்காமல் தடுத்து நிறுத்தினர். 

பெட்ரோல் பங்கில் கொள்ளையடிக்கும் போது மர்ம நபர்கள் இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டனர். குற்றத்தைச் செய்துவிட்டு அவர்கள் அங்கிருந்து தப்பிச் செல்லும் போது ஒரு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. தப்பியோடிய கொள்ளையர்களை தடுப்பை பயன்படுத்தி தடுக்க முயன்ற பெட்ரோல் பம்ப் ஊழியர் மீது மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டார். எனினும், கொள்ளையர்கள் இரண்டு பைக்குகளில் அங்கிருந்து தப்பிச் சென்றன

சம்பவம் அறிந்து வந்த போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றாகள்

மேலும் விவரங்களுக்கு:-

https://twitter.com/ajitsingh007417/status/1712302192856887617

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback