Breaking News

கேரளாவில் கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் குண்டு வெடிப்பு - ஒருவர் உயிரிழப்பு 29 பேர் காயம்

அட்மின் மீடியா
0

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் குண்டு வெடிப்பு - ஒருவர் உயிரிழப்பு

கேரளாவின் எர்ணாகுளம் அருகே உள்ள கமலசேரி பகுதியில் கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்ததாக கூறப்படுகிறது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு மற்றும் 29 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.



வெடிகுண்டு தடுப்பு பிரிவு, தடயவியல் குழு மற்றும் என்ஐஏ குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.பேபி பிவி, உதவி ஆணையர் ஏசிபி திருக்காக்கரா, இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், 20-25 பேர் காயமடைந்துள்ளதாகவும்உறுதிப்படுத்தினார்.மேலும் தற்போது நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது, ஆரம்ப விசாரணையின்படி, 5 முதல் 10 வினாடிகளில் இரண்டு குண்டுவெடிப்புகள் நடந்தன

ஞாயிற்றுக்கிழமை என்பதால் இன்று கிறிஸ்தவர்கள் தேவாலயங்களில், அரங்கங்களில் கூட்டு பிரார்த்தனையில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில், கேரள மாநிலம் களமச்சேரி பகுதியில் மாநாட்டு அரங்கின் ஒன்றில் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, காலை 9.30 மணியளவில் பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்ததாக கூறப்படுகிறது. இதனால் அங்கிருந்தவர்கள் சிதறி ஓடினர்.

சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள தீயணைப்பு வீரர்கள், தீயில் எரிந்த உடல் ஒன்றை மீட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. யெகோவா சாட்சிகள் என்ற கிறிஸ்தவ மதப்பிரிவினர், மாநாட்டு அரங்கில் பிரார்த்தனை மேற்கொண்டிருந்தபோது, பல முறை குண்டு வெடித்ததாக கூறப்படுகிறது.

பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து வெடித்ததாக தகவல்...சில நிமிடங்களில் மூன்று வெடிப்புகள் நடந்ததாக நேரில் கண்ட சாட்சிகள் கூறுகின்றனர்.குண்டு வெடிப்பா அல்லது வேறு வகையான விபத்தா என்ற விபரங்கள் வெளிவரவில்லை

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback