Breaking News

சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை கண்காணிக்க குழுக்கள் அமைப்பு - தமிழக அரசு

அட்மின் மீடியா
0

தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக வாட்ஸப், பேஸ்புக் மற்றும் யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்கள் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வழியில் இழிவான முறையில் பதிவிட்டு மத மோதல் கருத்துக்கள் மற்றும் தவறான தகவல்கள் பரப்பபடுகின்றது,மத நல்லிணக்கத்தை சீர்குலைப்போர் மீது நடவடிக்கை கோரி சென்னை உயர்நீஹிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. 

 


அதில் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோரையும் தவறான தகவல்களையும் பதிவுடுவோரை கண்காணிக்க மாவட்டந்தோறும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அதன்படி, மாநகர காவல் ஆணையாளர் அலுவலகங்கள், மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகங்களில் குழு அமைக்கப்பட்டுள்ளது மேலும் அந்த குழுக்களில் சமூக வலைதள நுட்பங்களை அறிந்த நிபுணர்கள் இந்த சிறப்பு குழுவில் இடம் பெற்றுள்ளதாகவும் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback