Breaking News

கொரானா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் தீவிர உடற்பயிற்சி செய்யாதீர்கள் - மத்திய அரசு எச்சரிக்கை முழு விவரம்

அட்மின் மீடியா
0

குஜராத் மாநிலத்தில் நடந்த நவராத்திரி விழாவின் போது கர்பா நடனம் ஆடிய 10 க்கும் மேற்பட்டோருக்கு அடுத்தடுத்து மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தனர்.

 


இந்நிலையில் குஜராத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா:-

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஐசிஎம்ஆர் தற்போது ஒரு விரிவான ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளது. அதில், தீவிர கொரானோ தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் கடுமையான உடற்பயிற்சிகளை செய்யக்கூடாது என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

உடற்பயிற்சி மட்டுமின்றி அதிக உடல் உழைப்பு தேவைப்படும் வேலைகளில் ஈடுபடுவது, ஓடுவது, மூச்சிறைக்கும்படி வேலைகளை செய்வது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். 

குறைந்தபட்சம் ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு கடினமாக வேலைகளில் ஈடுபடக் கூடாது. இதனைக் கடைப்பிடித்தால் மாரடைப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம் என மன்சுக் மாண்டவியா கூறினார்.

 வீடியோ பார்க்க:-

https://twitter.com/ANI/status/1718833975731564694

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback