Breaking News

திருச்செங்கோட்டில் குழந்தை விற்பனையில் ஈடுபட்ட அரசு மருத்துவர் கைது

அட்மின் மீடியா
0

திருச்செங்கோட்டில் குழந்தை விற்பனையில் ஈடுபட்ட அரசு மருத்துவர் கைது

மேலும் மருத்துவர் அனுராதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்!

 


நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவர்கள் தினேஷ் நாகஜோதி தம்பதி. இவர்களுக்கு கடந்த7ஆம் தேதி 3வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. திடீரென குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாததால் திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு தம்பதியினர் அந்த குழந்தையை சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளார்

அங்கு மகப்பேறு பெண் மருத்துவர் அனுராதா என்பவர் சிகிச்சை பார்த்துள்ளார், மேலும் சிகிச்சைக்கு பின்பு குழந்தையின் பெற்றோர் பற்றிய தகவல்களை மருத்துவர் அனுராதா குழந்தைகளை விற்பனை செய்யும் கரூரைச் சேர்ந்த இடைத்தரகர் லோகாம்பாள் என்பவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து லோகாம்பாள் குழந்தையின் பெற்றோரிடம் மூன்று லட்சம் ரூபாய் தருவதாக ஆசை வார்த்தை கூறி பெண் குழந்தையை விற்க வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. 

இதனால் சந்தேகமடைந்த குழந்தையின் பெற்றோர் இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா ஆகியோரிடம் புகார் அளித்துள்ளனர். 

உடனடியாக  காவல்த்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், முதற்கட்டமாக லோகம்மாள் கைது செய்யப்பட்டார். அடுத்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அரசு மகப்பேறு மருத்துவர் அனுராதா  காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட இருவரிடமும் விற்கப்பட்ட குழந்தைகள் பற்றி விசாரணையை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் குழந்தை விற்பனையில் ஈடுபட்ட மருத்துவர் அனுராதாவை பணியிடை நீக்கம் செய்ய அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். மேலும் மருத்துவர் அனுராதா மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும் அந்த உத்தரவில் தெரிவித்துள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback