Breaking News

அடையார் ஆனந்த பவன் தீபாவளி கவுண்டவுன் பரிசு என பரவும் மோசடி முழு விவரம் a2b diwali gift fake

அட்மின் மீடியா
0

தீபாவளி கிப்ட் என வாட்ஸப்பில் பரவும் மோசடி லிங்க் யாரும் கிளிக் செய்யவேண்டாம்





தற்போது வர இருக்கும் தீபாவளி பண்டிகையை ஒட்டி, தனியார் துணிக்கடை, நகைக்கடை, உணவகங்கள் தள்ளுபடி தருவதாக கூறி, வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் போலி GIFT, COUPON CODEகளை  சிலர் ஷேர் செய்து வருகின்றார்கள்

ஆனால் அதிகாரபூர்வமாக நிறுவனங்கள் அறிவிக்காத நிலையில் சிலர் அந்நிறுவனத்தின் பெயரில் மோசடியாக பணமோசடி செய்ய இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்

வாட்ஸ்அப் குழுக்களில் இத்தகைய மெசேஜ் ஏதேனும் வந்தால், மக்கள் அதனை யாருக்கும் ஷேர் செய்ய வேண்டாம், நம்பி ஏமாற வேண்டாம்.

தற்போது பரவும் மோசடியான அந்த லின்ங் கிளிக் செய்தால் நீங்கள் அங்கு ஏமாற்றப்படுவீர்கள், அதில் உங்கள் விவரங்களையும் பதிவு செய்யவேண்டாம்

அடையார் ஆனந்த பவன் தீபாவளி கவுண்டவுன் பரிசு என பரவும் மோசடி முழு விவரம்

அடையார் ஆனந்த பவன் உணவகத்தின் பெயரில் தீபாவளி கவுண்டவுன் பரிசுகள் என்று கூறி பகிரப்படும் மோசடி விளம்பரங்களை யாரும் நம்ப வேண்டாம் என அதன் நிர்வாகம் விளக்கம் கொடுத்து இருக்கிறது.

சமூக வலைதளங்களில் தீபாவளி கவுண்ட்டவுன் (பரிசுகள்) என்று குறிப்பிட்டு A2B பெயரில் விளம்பரம் ஒன்று அதிகளவில் பகிரப்பட்டு வந்தது. இந்த நிலையில் அப்படி ஒரு திட்டத்தை தாங்கள் அறிவிக்கவில்லை எனவும், அதை நம்பி யாரும் ஏமாந்து விட வேண்டாம் எனவும் அந்த உணவகம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

                        

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்:-

அடையார் ஆனந்த பவனின் (A2B) பொது மக்களுக்கும் மற்றும் மிகவும் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால், "தீபாவளி கவுண்ட்டவுன் (பரிசுகள்)" Whats App இல் எங்கள் அதிகாரப்பூர்வ வர்த்தக முத்திரையுடன் எங்கள் நிறுவனத்தின் பெயர் மற்றும் பாணியில் சிலர் தங்கள் ஆதாயத்துக்காக போலியான மற்றும் மோசடியான ஒரு வழிமுறையை உருவாக்கி உள்ளனர். இது போன்ற மோசடியான சலுகைகளுக்கு எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களும் பொதுமக்களும் ஏமாற வேண்டாம் என எச்சரிக்கிறோம். A2B தங்களது மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு அத்தகைய சலுகைகளை வழங்கவில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்து கொள்கிறது. இதுபோன்ற மோசடியான சலுகைகளால் பாதிக்கப்படும் எவரும் அதை அவர்களின் விருப்பம் மற்றும் அபாயத்தின் பேரில் செய்கிறார்கள். மேலும் எங்களது A2B பாதிக்கப்பட்ட வர்களின் எந்த விதமான இழப்புக்கும் எந்த வகையிலும் பொறுப்பாகாது. எங்கள் நிறுவனம் ஏற்கனவே குற்றவாளிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை எடுக்க உரிய வழிகளை தொடங்கியுள்ளது.

எச்சரிக்கை:-

வாடிக்கையாளர்களுக்கு இலவச தீபாவளி பரிசுகளை வழங்குவதாக கூறி ஃபிஷிங் URLகளை அனுப்புகின்றன. அதில் பயனர்களின் தொலைபேசி எண்கள், வங்கிக் கணக்குத் தகவல் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய அவர்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடும் மோசமான நோக்கத்துடன் அனுப்பப்படுகின்றன. இது போன்ற பிஷிங் இணையதளங்களில் உங்கள் விவரங்களை கொடுக்கவேண்டாம்

இதுபோன்ற பிஷிங் Website -களில் வரும் Link -களில் சென்று Cell No, Bank Account No, OTP, Debit/Credit Card/CW போன்ற எந்த தகவல்களையும் பகிர்ந்து கொள்ளவேண்டாம்.சைபர் கிரைம் பற்றிய புகார்களுக்கு www.cybercrime.gov.in என்ற வளைதளத்தில் தங்கள் புகார்களை பதிவிடவும்.

சைபர் குற்றவாளிகள் மூலம் ஏற்பட்ட நிதியிழப்புகளுக்கு 1930 என்ற எண்ணை உடனடியாக தொடர்பு கொள்ளவும். 

Tags: FACT CHECK

Give Us Your Feedback