பள்ளிக்கல்வி இணை இயக்குனர்கள் 9 பேர் அதிரடி இடமாற்றம்
பள்ளிக்கல்வி இணை இயக்குனர்கள் 9 பேர் அதிரடி இடமாற்றம்
பள்ளிக்கல்வித்துறையில் 9 இணை இயக்குனர்கள் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர்கள் க.சசிகலா, சி.செல்வராஜ், செ.அமுதவல்லி, க.செல்வகுமார், பொ.பொன்னையா ஆகியோர் பணியிடமாற்றம் செய்யப்படுகின்றனர்.
இதேபோல் இணை இயக்குனர்கள் வை.குமார், நா.ஆனந்தி, வெ.ஜெயக்குமார் ஆகியோரும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பள்ளிக்கல்வித்துறையில் துணை இயக்குனர்கள் 6 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. துணை இயக்குனர்கள் பெ.அய்யண்ணன், அ.ஞானகெளரி, ஆர்.பூபதி, ஆர்.சுவாமிநாதன் இணை இயக்குனர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல் துணை இயக்குனர்கள் கே.முனுசாமி, எம்.ராமகிருஷ்ணன் ஆகியோரும் இணை இயக்குனர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்
Tags: தமிழக செய்திகள்
